பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

க

212

திருவாய்மொழி - ஏழாம் பத்து

கிறது ‘நாட்டை அளித்து’ என்று. 1இதற்காக அன்றோ முக்கண்ணனை, 2‘ஷடர்த்தநயந: ஸ்ரீமாந் - முக்கண்ணனான ஸ்ரீமாந்’ என்றது? 3இல்லையாகில், பிக்ஷூகனை ‘ஸ்ரீமாந்’ என்ன விரகு இல்லை அன்றோ? நெடுநாள் இருந்து தன்னால் அல்லது செல்லாதபடி செய்து, இட்டு வைத்துப்போகாதே கூடக் கொடுபோய் உஜ்ஜீவிப்பித்தபடியைச் சொல்லுகிறது ‘உய்யச்செய்து’ என்று.

    நடந்தமை கேட்டுமே4 - ‘விலங்கினங்கள் அனைத்தும் இராமனைப் பின் தொடர்ந்தன’ என்கிறபடியே, தன்னுடனே கூடக் கொடுபோய் வைத்தான்’ என்று ஐயப்பட்ட வேண்டாதபடி அருளிச்செய்து வைத்தாரே அன்றோ ஆழ்வார், ‘அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி, என்று பரமபதத்தே கொடுபோனமையை? நடந்தமை கேட்டும் - கொடு சென்ற இந்தச் செயலைக் கேட்டும் என்றது, பசித்தார் 6இளைத்தாரைப் பார்த்ldக்கொடு போகையைத் தெரிவித்தபடி. 7தாமரைக் கண்ணனுடைய திருநாம சங்கீர்த்தன

_____________________________________________________________________

1. ‘இதற்காகவன்றோ’ என்றது., ‘எழுந்தருளியிருந்து . . . . . . . . . . .  எழுந்தருள
  வேணும் என்றதற்காக அன்றோ?’ என்றபடி.

2. ‘ஷடர்த்த நயந: ஸ்ரீமந் மஹாதேவோ வ்ருஷத்வஜ;’

என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 3. ‘வரதற்கும் வரதன்’ என்பது, கம்ப ராமா. யுத்.
மீட்சிப்பட 114.

3. ‘‘ஸ்ரீமாந்’ என்றதற்கு இது கருத்தாக வேண்டுமோ?’ என்ன, ‘இல்லையாகில்’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘மானேய் நோக்கி’
  (திருவாய். 1. 5 : 5) என்னும் திருப்பாசுரத்தின் வியாக்கியானம் பார்க்க.

4. ‘திர்யக்யோகிநிகதாஸ்சாபி ஸர்வே ராமம் அநுவ்ரதா:’

என்பது, ஸ்ரீராமா. உத்தரகாண். 109 : 22.

5. ‘பிரமலோகத்தில் ஓர் இடத்திலே வைத்தான் என்று இருக்கிறதே?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்குறார், ‘இன்ன இடத்திலே’ என்று தொடங்கி. ‘அன்று
  சராசரங்களை’ என்பது, பெருமாள் திருமொழி. 10 : 10.

6. ‘பசித்தார் இளைத்தாரை’ என்றது, ‘பசித்தவர்களாகி இளைத்தவர்களை’ என்றபடி.
  ‘அத்யந்தம் ஆர்த்தரை’ என்றவாறு.

7. ‘அவன் பார்வை தாரகமாமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘தாமரைக்கண்ணனுடைய’ என்று தொடங்கி.

        ‘பாதேயம் புண்டரீகாக்ஷ நாம ஸங்கீர்த்தநாம்ருதம்’


என்பது, ஜிதந்தா. பாதேயம் - தோட்கோப்பு.