வ
|
முதல் திருவாய்மொழி - பா.
8 |
21 |
வி-கு :
‘வினையேனை ஐவரால் மோதுவித்துச் சாதியா வகை தடுத்து என் பெறுதி?’ என்க.
ஈடு : மூன்றாம்
பாட்டு. 1‘உலகத்திற்கு எல்லா வகையாலும் இரட்சகனாயிருந்து வைத்து, என்னை உன் திருவடிகளிலே
கிட்டாதபடி இந்திரியங்களாலே நலிவித்தால் உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்.
வேதியாநிற்கும் -
2அழகிதாக எல்லா நிலைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டேன். ‘உடனாய் மன்னி’ என்று
பாரித்த எல்லாம் இவற்றுக்குப் பணி செய்கைக்கு ஆவதே! வேதியாநிற்கும் - வேதனையே செய்யாநிற்கும்.
3‘தான் உயிருடன் வாழும் வகையிலும் அக்நிஹோத்திரம் செய்யவேண்டும்’ என்றால்,
‘ஸாயம் ப்ராத: - மாலை காலை’ என்று ஒரு காலத்திலே ஒதுக்காநின்றதன்றோ? அங்ஙன் அன்றிக்கே,
எல்லா நிலைகளிலும் அடிமை செய்ய ஆசைப்பட்டுச் சொன்ன எல்லாம் இவற்றின் பக்கலிலே ஆனபடியைத்
தெரிவித்தபடி. வினையேனை - போகத்துக்குப் பாரித்த எல்லாம் கிலேசப் படுகைக்குக் காரணம்
ஆவதே! உன் திருவடிச் சாதியா வகை நீ தடுத்து - 4என்ன உறவின் கனந்தான்! தம்முடைய
குற்றத்துக்கும் அவனை வெறுக்கும்படிகாணும் சம்பந்தம் இருக்கிறபடி. 5சாதநாநுஷ்டானம்
செய்து பலத்துக்குத் தடை செய்வாரைச் சொல்லு
_________________________________________________________________________
1. திருப்பாசுரம் முழுதினையும்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘வேதியாநிற்கும்’ என்ற
நிகழ்காலத்தைத் திருவுள்ளம் பற்றி ஆழ்வாருடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார், ‘அழகிதாக’
என்று தொடங்கி. அதனை
விவரணம் செய்கிறார், ‘உடனாய்’ என்று தொடங்கி. ‘உடனாய்’ என்பது.
திருவாய்மொழி, 3. 3 : 1.
3. மேல் திருப்பாசுரத்தில்
‘இராப்பகல்’ என்றவர், இங்கு, வேதியா நிற்கும்’ என்று
நிகழ்காலமாக அருளிச்செய்வதற்குக் காரணத்தை
அருளிச்செய்கிறார், ‘தான்
உயிருடன்’ என்று தொடங்கி. என்றது, ‘எல்லா நிலைகளிலும்’ என்றபடி.
‘யாவஜ்ஜீவம் அக்நிஹோத்ரம்
ஜூஹூயாத்’
என்பது, யஜூர் வேதம்.
4. வியாக்கியாதாவின்
ஈடுபாடு, ‘என்ன’ என்று தொடங்கும் வாக்கியம்.
5. ‘சம்பந்தத்தை
நினைத்து இவர் வெறுக்கும்படியாமாறு யாங்ஙனம்?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘சாதாநாநுஷ்டானம்’
என்று தொடங்கி. ‘சொன்னபடி
பாரீர்’ என்றது, ‘சம்பந்தத்தாலே சொன்னபடி பாரீர்’ என்றபடி.
|