பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

22

திருவாய்மொழி - ஏழாம் பத்து

மாறு போலே சொன்னபடி பாரீர். உன் திருவடிகளைச் சாராதபடி தகைந்து, என் பெறுதி - 1என் சொரூபம் அழியுமித்தனையோ வேண்டுவது? நான் படுகிற வியசனத்தால் உனக்கு ஒரு பிரயோஜனம் உண்டாகில் எனக்கு அதுவே அமையும்; 2உனக்காக இருக்குமதன்றோ எனக்கு வேண்டுவது? 3தண்ணீரின்றும் மேலே எடுக்கப்பட்ட மீனைப்போன்றவர்’ என்கிற இளையபெருமாள், 4துர்வாசர் வர, ‘பெருமாளுக்கு ஒரு துன்பம் வர ஒண்ணாது’ என்று தம் நோவு பாராதே விடை கொண்டார் அன்றோ?

    என் பெறுதி - 5நீ, சொன்ன சொல் தவறாதவன் ஆகைக்காக ஸ்ரீபரதாழ்வானைப் பிரித்து வைத்தாய், என் இருப்புக்கு உனக்கு என்ன பிரயோஜனம் உண்டு? அந்தோ - 6தனக்கு ஒரு பிரயோஜனம் இன்றியிலே பிறர் கேடே பிரயோஜனமாக நலியும்படி பிறந்தேனே!

______________________________________________________________________

1. ‘என் பெறுதி?’ என்றதனால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார், ‘என் சொரூபம்’
  என்று தொடங்கி. என்றது, ‘என்னை நீ தகைந்து என்ன பிரயோஜனத்தைப்
  பெறப்போகிறாய்? என் சொரூபம் அழியுமது ஒழிய வேறு ஒரு பிரயோஜனம்
  காணேன்’ என்றபடி. ‘ஆனால், ஒரு பிரயோஜனம் உண்டானால் ஆறியிருப்பரோ?’
  என்ன, ‘நான் படுகிற’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. ‘ஈஸ்வரனுக்கு ஒரு பிரயோஜனம் உண்டானால், தம்மை அழியமாறுக் கூடுமோ?’
  என்ன, ‘உனக்காக’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

3. அப்படித் தம்மை அழிய மாறியதற்குத் திருஷ்டாந்த மூலமாகப் பிரமாணம்
  காட்டுகிறார், ‘தண்ணீரினின்றும்’ என்று தொடங்கி.

        ‘ஜலாந் மத்ஸ்யாவி வோத்த்ருதௌ’

என்பது, ஸ்ரீராமா. அயோத். 53 : 31.

        ‘நீருள வெனின்உள மீனும் நீலமும்
        பாருள வெனின்உள யாவும் பார்ப்புறின்
        நாருள தனுவுளாய் நானும் சீதையும்
        யாருள ரெனின்உளேம்? அருளு வாய்என்றான்’

என்பது, கம்பராமாயணம்.

4. இச்சரிதப் பகுதியைக் கம்பராமாயணம் உத்தரகாண்டம், சந்திர கேது நகர்ப்
  படலத்தில், 48 - ஆம் செய்யுள் முதல் காண்க.

5. ‘தன்னுடைய பிரயோஜத்தின் பொருட்டுப் பிறருடைய துக்கத்தைப் பாராமல் காரியம்
  செயத இடமுண்டோ?’ என்ன, ‘நீ சொன்ன சொல்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.

6. ‘என் பெறுதி?’ என்றதனைக் கடாட்சித்து, ‘அந்தோ’ என்றதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘தனக்கு ஒரு பிரயோஜனம்’ என்று தொடங்கி.