க
|
218 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
களையே வைதல்.
‘அநுகூலராய் இருப்பார்க்கு உடலின் சேர்க்கையாலே தம்மை அறியாமலும் ஒரு தீச்செயல் விளையும்
அன்றோ? அப்படியே இவனுக்கும் தன்னை அறியாமலே ஒரு நல்வார்த்தையும் கலசுமோ?’ என்னில்,
‘அதுவும் இல்லை’ என்பார், ‘வசவுகளே வையும்’ என்கிறார். அதற்கு அடி சொல்லுகிறார் மேல்:
சேண்பால் பழம்பகைவன் - 1‘மிகவும் ஜன்மப் பகைவன்’ என்றபடி; 2இந்தப்
பிறவியே அன்றிக்கே முற்பிறவிகளிலும் பகைவனாய்ப் போருகிறான் அன்றோ? என்றது, ‘இவன் ஒவ்வொரு
பிறவியிலும் செய்த பகைச் செயல்களுக்கு ஓர் அளவு இல்லை அன்றோ?’ என்றபடி. இப்படிப்பட்ட பிறவிகள்தாம்
பல. 3அந்த அந்தப் பிறவிகளில் உண்டான காலத்தின் மிகுதியும், செய்த பகைச்செயலின்
மிகுதியும், இவை எல்லாவற்றையும் நினைக்கிறது, பகையினுடைய பழமையாலே. இதனால், ‘நினைவு இல்லாமலே
சொல்லிலும் வாசனையாலே தப்பாது,’ என்கை. 4அன்று ஈன்ற கன்று அப்போதே தாய் முலையிலே
வாய் வைக்கும்: அது அந்தப் பிறவியின் வாசனை கொண்டு அன்றே? இவனுக்கும் இப்பிறவியிலே பகவானை
நிந்தை செய்வதற்குக் காரணம் முற்பிறவிகளின் வாசனை அன்றோ?
திருவடி தாள்பால்
அடைந்த-எல்லாப் பொருளுக்கும் சுவாமி கிருஷ்ணனுடைய திருவடிகளின் பக்கத்தைக் கிட்டின.
____________________________________________________________________
1. ‘சேட்பால் பழம்பகைவன்’
என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘மிகவும்’
என்று தொடங்கி. சேண் பழம்பகையைப்
பாலாகவுடையவன்; ‘சேண்’ என்று
மிகுதியாய், ‘மிகவும் பழையதான பகையைச் சுபாவமாகவுடையவன்’ என்பது
பொருள்.
2. ‘மிகவும் ஜன்மப்
பகைவனானபடி எங்ஙனே?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இந்தப் பிறவியே’ என்று தொடங்கி.
இங்கு, வில்லிபாரதம், இராயசூயச்
சருக்கம், 142 முதல் 150 முடியவுள்ள
செய்யுள்களைக் காண்க.
3. பகையினுடைய பழைமை கூறியதற்குப்
பயனைத் தெரிவிக்கிறார், ‘அந்த அந்த’
என்று தொடங்கி.
4. ‘இந்தப் பிறவியின்
வாசனை ஆனாலோ?’ எனின், அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அன்று’ என்று தொடங்கி.
‘பவ்லாவுள் உய்த்து
விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக்
கோடலை;-தொல்லைப்
பழவினையும் அன்ன
தகைத்தரோ தற்செய்
கிழவினை நாடிக்
கொளற்கு.’
என்பது, நாலடியார்.
|