பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1ச

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 3

219

1சாயுஜ்ய வக்ஷண மோக்ஷமாகிறதுதான் இன்னது என்கிறது. என்றது, இடையீடு இன்றிக்கே கிட்டி நின்று நித்திய கைங்கரியம் செய்யப்பெறுதல் என்பதனைத் தெரிவித்தபடி. 2‘பரம்பொருளை அறிந்தவன் பரம்பொருள் போன்று ஆகிறான்,’ என்றும், 3மேலான ஒப்புமையைப் பெறுகின்றான்’ 4‘தம்மையே ஒக்க அருள்செய்வர்’ என்றும், 5‘என்னுடைய ஒப்புமையை அடைந்தவர்’ என்றும், 6‘பரமாத்துவோடு ஒத்தவன்’ என்றும் சொல்லுகிறவற்றால், வஸ்து ஐக்யம் சொல்லுகிற அன்று; பேற்றில் வந்தால் அவனோடு இவனுக்கு எல்லா வகையாலும் ஒப்புமை உண்டு என்றது. 7‘உலகத்தைப் படைத்தல் முதலியன நீங்கலாக’ என்றும், அனுபவத்தில் பரமாத்துமாவோடு ஒப்புமை கூறுகிற காரணத்தாலும்’ என்றும் சொல்லுகையாலே. 8சாயுஜ்யமாகிறது, ‘அவனோடு ஒன்றாம்’ என்கிறது அன்று; அவன் திருவடிகளிலே கைங்கரியம்

____________________________________________________________________

1. ‘தாள்பால் அடைந்த’ என்கையாலே, சாயுஜ்யமாவது ஐக்கியம் அன்று என்று
  பரிகரிக்கிறார் ‘சாயுஜ்ய’ என்று தொடங்கி.

2. அதற்குப் பிரமாணங்கள் காட்டுகிறார், ‘பரம்பொருளை’ என்று தொடங்கி.

    ‘பிரஹ்மவேத ப்ரஹ்மைவபவதி’ என்பது, முண்டகோபநிடதம், 3 : 2.

     
‘ப்ரஹ்மைவ’ என்றவிடத்தில் ஏவகாரம், ‘விஷ்ணுரேவ பூத்வா’ என்ற
  இடத்திற்போன்று, ‘ஸாம்யம் உபைதி’ என்பது போன்ற வசனங்கட்குத் தகுதியாக,
  ‘இவ’ என்ற சொல்லின் பொருளைக் காட்டுகிறது.

3. ‘பரமம் ஸாம்யம் உபைதி’ என்பது, முண்டகோபநிடதம், 3. 1 : 3.

4. ‘தம்மையே’ என்பது, பெரிய திருமொழி

5. ‘மம ஸாதர்ம்யமாகதா;’ என்பது, ஸ்ரீ கீதை, 14:2.

6. ‘ஸமாநோ ஜ்யோதிஷா’ என்பது, போதாயன விருத்தி.

7. மோக்ஷம் என்பது, ஐக்கியம் அன்று என்பதற்கு, வேறு பிரமாணமும் காட்டுகிறார்,
  ‘உலகத்தை’ என்று தொடங்கி.

    ‘ஜகத்வியாபாரவர்ஜம்,’ ‘போகமாத்ர ஸாம்ய லிங்காச்ச’

என்பன, பிரஹ்ம மீமாம்சை

8. ‘நித்தியகைங்கரியம் செய்யப்பெறுதல்’ என்று மேலே கூறியதனை விவரிக்கிறார்,
  ‘சாயுஜ்யமாகிறது’ என்று தொடங்கி.

    ‘ஆதிப் பரனோடுஒன் றாம்என்று சொல்லும்அவ் வல்லவெல்லாம்
     வாதில்வென் றான்எம் மிராமா நுசன்மெய்ம் மதிக்கடலே’

என்பது, இராமாநுச நூற்றந்தாதி, 58.