பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

220

திருவாய்மொழி - ஏழாம் பத்து

செய்யும் என்கிறது; 1‘யாவர் மிக்க பத்தியையுடையவர்களாய் உபாசனை செய்கிறவர்களாய்ச் சமானமான உயர்ந்த ஜீவனத்தை அடைந்தார்களோ, அவர்கள் விரோதி கழிந்தவர்களாய் எப்பொழுதும் என்னுடைய தொண்டர்கள் ஆகிறார்கள்,’ என்றும் சொல்லுகையாலே. தன்மை அறிவாரை அறிந்துமே - 2கேட்பார்க்கு விஷயம் உண்டாக்குகிறார், 3இந்தக் குணஞானமுடையாரை அறிந்து வைத்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றுக் கேட்பரோ?

 

     4‘இவன், திருவடிகளைக் கிட்டிற்று என்கொண்டு?’ என்னில், திருநாமங்களைச் சொல்லித் துவங்கரிக்கையும், கையும் திருவாழியுமான அழகை மரணகாலத்தில் நினைக்கவும் கூடும் அன்றோ? 5மேலெழ ஆராய்ந்து பார்த்தால், சில காரணங்கள் சொல்லலாம்; இதற்கு இனி ஒரு காரணம் தேடிச் சொல்லுகையாவது, அவன் கிருபைக்கு ஒரு கொத்தை சொல்லுகையன்றோ? 6‘சர்வேஸ்வரன் கிருபையாலே சிசுபாலன் திருவடிகளைப் பெற்றான்’ என்று ஆழ்வார்களும் இருடிகளும் எல்லாரும் சொல்லிக்கொண்டு போருவார்கள்

____________________________________________________________________


1. ‘சாயுஜ்யம் என்பது, கைங்கரியத்தைச் சொல்லும்,’ என்பதற்குப் பிரமாணம்
  காட்டுகிறார், ‘யாவர்’ என்று தொடங்கி.

    ‘ஸாயுஜ்யம் ப்ரதிபந்நா யே தீவ்ரபக்தா: தபஸ்விந:
     கிங்கரா மம தே நித்யம் பவந்தி நிருபத்ரவா;’

என்பது, பரமஸம்.

2. ‘தன்மை அறிவாரை அறிந்துமே’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
  ‘கேட்பார்க்கு’ என்று தொடங்கி. என்றது, ஓர் ஆசாரியன் பக்கலிலே
  கேட்கவேண்டுகையாலே, முன்னே ‘கேட்பார்கள்’ என்றவர்களுக்குத் ‘தன்மை
  அறிவாரை’ என்று கேட்கைக்கு விஷயம் உண்டாக்குகிறார் என்றபடி.

3. மேலே கூறியதனை விவரிக்குமுகத்தால் அந்வயமும் காட்டுகிறார், ‘இந்தக்
  குணஞானமுடையாரை’ என்று தொடங்கி.

4. ‘பகைவனான சிசுபாலன் திருவடிகளைக் கிட்டுகைக்குக் காரணம் யாது?’ என்னும்
  சங்கையை அநுவதித்துப் பரிகரிக்கிறார், ‘இவன்’ என்று தொடங்கி. துவங்கரிக்கை
  - ‘நீ’ என்று எதிரிட்டுப் பேசுதல்.

5. ‘துவங்கரிக்கையும், வடிவழகை நினைத்தலுமாகிற இவற்றைக் காரணங்களாகச்
  சொல்ல வேண்டுமோ? ‘சத்ருச ஸாதனம் உண்டு’ என்று காரியத்தைக் கொண்டு
  அநுமித்தாலோ?” என்கிற சங்கையைத் திருவுள்ளம் பற்றிப் பரிகரிக்கிறார்
  ‘மேலெழ’ என்று தொடங்கி.

6. ‘நிர்ஹேதுகம் என்கிறது என்கொண்டு?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘சர்வேஸ்வரன்’ என்று தொடங்கி.