ஈ
|
ஐந்தாந்திருவாய்மொழி - பா.
6 |
229 |
ஈடு :
ஆறாம் பாட்டு. 1‘மேலே கூறிய குணங்கள் தாம் ஓர் ஏற்றமோ, அலம் புரிந்த நெடுந்தடக்கையைக்
கொண்டு கோட்டம் கை வாமனனாய் இந்தப் பூமியைக் காப்பாற்றிய மஹா குணத்துக்கு?’ என்கிறார்.
கேட்டும் உணர்ந்தவர்
- ஓர் ஆசாரியன் ஓர் அர்த்தத்தை உபதேசித்தால் அதனைக் கேட்டு, 2‘அறிந்து இதன்படி
ஆகக்கடவன்’ என்கிறபடியே, பின்னை அந்த அர்த்தத்தைத் தெளிந்திருக்குமவர்கள். கேசவற்கு ஆள்
அன்றி ஆவரோ - 3புறம்பே அடையத்தக்கவர் இல்லாதபடி தானே அடையத் தக்கவனானவனுக்கு
ஒழிய ஆள் ஆவரோ? ‘கேசவன்’ என்ற பெயர் 4‘பிரமனும் ஈசனுமாகிய நாங்கள்
இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்; ஆதலால், கேசவன் என்ற பெயரையுடையரானீர்,’
என்கிறபடியேயாதல் அடர்ந்து நீண்ட மயிர்முடியையுடையவன் என்ற காரணத்தாலாதல் வந்தது. வாட்டம்
இலா வண் கை - 5கொடுத்து மாறக்கடவது அன்றியே, எப்போதும் கொடுக்கையிலே ஒருப்பட்ட
கை. 6இராவணன் முதலாயினோரைப் போன்று தலை அறுத்துப் போகட ஒண்ணாமைக்குக் காரணம்
உண்டாகையாலே அழியச் செய்திலன்.
__________________________________________________________________
1. மேலே கூறிய ஐந்து திருப்பாசுரங்களிலும்
கூறிய குணங்களைக் காட்டிலும்,
இத்திருப்பாசுரத்திற்கூறுகின்ற குணம்
ஏற்றமானது என்கிறார், மேலே கூறிய’ என்று
தொடங்கி. ‘அலம் புரிந்த’ என்பது, திருநெடுந்தாண்டகம்,
6. அலம் புரிந்த
நெடுந்தடக்கை - இரவலர்கள் மனம் நிறையும்படி கொடுக்க வல்ல பெரிய கை.
2. ‘ஏவம் ஜ்ஞாத்வா பவிதும்
அர்ஹதி’ என்பது. இதனை, ‘ஜ்ஞாத்வா ஏவம் பவிதும்
அர்ஹதி’ என்று பிரித்துக் கூட்டிக்கொள்க.
3. பிரமனுக்கும் சிவனுக்கும்
காரணன் ஆனவன்’ என்ற பொருளிலே பாவம்
அருளிச்செய்கிறார், ‘புறம்பே’ என்று தொடங்கி.
4. அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘பிரமனும்’ என்று தொடங்கி.
‘க இதி ப்ரஹ்மணோநாம
ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே
ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்’
என்பது, பாரதம், ஹரிவம்ஸம்,
கைலாச யாத்திரை.
5. வெள்ளியை யாதல் விளம்பினை
மேலோர்
வள்ளிய ராக வழங்குவ
தல்லால்
எள்ளுவ என்சில? இன்னுயி
ரேனும்
கொள்ளுதல் தீது;
கொடுப்பது நன்றால்.’
என்பது, கம்பராமாயணம்.
6. இப்போது இவனுடைய கொடையைக் கூறுதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘இராவணன்’ என்று தொடங்கி.
|