பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ம

230

திருவாய்மொழி - ஏழாம் பத்து

மாவலி வாதிக்க வாதிப்புண்டு-இது பற்றாசாக அவன் நெருக்க நெருக்குண்டு. ஈட்டம் கொள் தேவர்கள் - 1கிராமணிகளைப் போலே, ஒருவர் உயர்வு ஒருவர் பொறாதே, தலை அறுப்பாரும் தலை அறுப்பு உண்பாருமாய்த் திரியக் கடவ சாதி அன்றோ? 2இப்படிச் சேராச் சேர்த்தியாய் இருக்கிறவர்கள் ஆபத்து மிக்கவாறே தங்கள் தங்கள் செருக்கினைப் போகட்டு. எல்லாரும் ஒரு மிடறாய் வந்து விழுந்தார்கள். ஈட்டம் - திரள். சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய - 3கூறு செய்வானும் அம்பலத்தே இருந்தால் ‘ஈஸ்வரனும் நம்பக்கல் வரத் தட்டு என்?’ என்று இருக்குமாறு போலே, ‘எல்லாரும் நம்பக்கல் வரவேணும்’ என்று இருந்தவர்கள் தங்கள் ஆபத்தின் மிகுதியினால் அன்றோ செருக்கு உற்றவர்களாய் இருக்கிறவர்கள் திரள வந்து இரந்தது?’ என்று திருவுள்ளத்தே கொண்டு அவர்கள் இடரைப் போக்கினபடி. (‘பெரியவர் யார்?’ என்ற ஐயத்தினால் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் போரை மூட்டிவிட விஷ்ணு ஜயித்ததனால் ) 4‘விஷ்ணுவை அதிகனாக எண்ணினார்கள்’  என்கிறபடியே, ஒரு சொத்தை வில்லை முரித்தபோதாக எம்பெருமான் அறப்பெரியன் என்பது; அல்லாது போது ‘ஈஸ்வரோஹம்’ என்பதான தேவசாதி பற்களைக் காட்ட, அவர்கள் இடரை நீக்கினபடி. 

    கோட்டம் கை வாமனனாய் - நீர் ஏற்கக் குவித்த அழகிய கையையுடையவனாய்; 5‘பொல்லாக் குறள்  உருவாய்ப் பொன்

____________________________________________________________________

1. ‘ஈட்டங்கொள்’ என்ற அடைமொழிக்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
  ‘கிராமணிகளைப் போலே’ என்று தொடங்கி, தலையறுப்பார் - சிவன்.
  தலையறுப்புண்பார் - பிரமன்.

2. ‘ஆயின். இப்படிப்பட்டவர்கள் ஒன்று கூடுவதற்குக் காரணம் யாது?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘இப்படி’ என்று தொடங்கி.

3. ‘இரந்தார்க்கு’ என்னாமல், ‘சென்று இரந்தார்க்கு’ என்றதற்குக் கருத்து
  அருளிச்செய்கிறார், ‘கூறு செய்வானும்’ என்று தொடிங்கி. கூறு செய்வான்
  - மணியன் பண்ணுமவன்.

4. ‘ஆயின், அவர்கள் செருக்குக்கொண்டு திரிகின்றவர்களோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘விஷ்ணுவை’ என்று தொடங்கி.

        ‘அதிகம் மேநிரே விஷ்ணும்’
   
என்பது, ஸ்ரீராமா. பால. 75 : 19.

     
இங்கே, கம்பராமாயணம், பரசுராமப்படலம், 25 முதல் 40 முடியவுள்ள
  செய்யுள்களைப் படித்து அறிதல் தகும்.

5. நீர் ஏற்றதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘பொல்லா’ என்று தொடங்கி. இது,
  நாய்ச்சியார் திருமொழி, 11 : 5.