பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 6

231

கையில் நீர் ஏற்று’ என்கிறபடியே, 1தேவர்களை நெருக்குகையாலே அழியச் செய்ய வேணும்; குண விசேடத்தாலே அழியச்செய்யமாட்டான்; இனி, இரண்டற்கும் தக்கதாக ஒரு வழி இரட்சகனான தான் பார்க்குமித்தனை அன்றோ? பொற்கை - பொலிவு எய்தின கை; ‘அழகிய கை’ என்றபடி. கொடுத்து வளர்ந்த கை; 2‘ஆயிரக்கணக்கான பசுக்களைத் தானம் செய்ததான பருத்து நீண்ட கை’ என்றும், ‘சத்திய பராக்கிரமத்தையுடையவரான பெருமாள் கொடுப்பார்; வாங்கமாட்டார்’ என்றும் சொல்லுகிறபடியே. செய்த கூத்துகள் கண்டுமே - 3அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே இரப்பிலே மூண்டு, மஹாபலி வேள்வி செய்யும் இடத்தளவும் செல்ல, பூமி நெளியும்படி பதறி நடந்து சென்று புக்கு, மான் தோலும் பூணு நூலும் தருப்பைப் புல்லுமான வணக்கமுள்ள வடிவத்தோடு நின்று ‘கொள்வன் நான்’ என்றாற் போலே சொன்ன பிள்ளைப்பேச்சுக்களும் சிறுகாலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்ததும் ஆகிற இச்செயல்கள் அடங்கலும் இவர்க்கு வல்லார் ஆடினாற்போலே இருக்கிறபடி.

    4
‘இறைமைத் தன்மைக்குரிய மேன்மையும் கிடக்கச் செய்தே, திருமகள் கேள்வனான தான் இரந்து தன்னை அடைந்தாரைக் காத்த நீர்மைக்குப் பிரளயங்கொண்ட பூமியை எடுத்துக் காத்தது ஒரு குணமாயிற்றதோ?’ என்கிறார்.

(6)

____________________________________________________________________

1. ‘நீர் ஏற்க வேண்டுவான் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘தேவர்களை’ என்று தொடங்கி.

2. ‘கொடுத்து வளர்ந்த கை’ என்பதற்குப் பிரமாணங்கள் இரண்டு காட்டுகிறார்,
  ‘ஆயிரக் கணக்கான’ என்று தொடங்கியும், ‘சத்திய’ என்று தொடங்கியும.

        ‘கோ ஸஹஸ்ர ப்ராதாதாரம் உபதாய புஜம் மஹத்’

என்பது, ஸ்ரீராமா. யுத். 21:7.

       
‘தத்யாத் ந ப்ரதிக்ருஹ்ணீயாத்’

என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 25.

3. ‘கூத்துகள்’ என்ற பன்மைக்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘அன்றே பிறந்து’
  என்று தொடங்கி. ‘கொள்வன்’ என்பது, திருவாய். 3. 8 : 9.

4. மேல் திருப்பாசுரத்தைக்காட்டிலும் இத்திருப்பாசுரத்திற்குரிய ஏற்றத்தை
  அருளிச்செய்கிறார், ‘இறைமைத் தன்மைக்குரிய’ என்று தொடங்கி.