New Page 1
|
ஐந்தாந்திருவாய்மொழி - பா.
7 |
233 |
பொருளை விட்டுப்
புறம்பே போவாரோ? வண்டு உண் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள் - ‘வண்டுகள் தேனைக்
குடிக்கின்ற பூமாலையையுடைய ஸ்ரீ மார்க்கண்டேயனுக்கு வாழ்நாள் உண்டாகைக்காக’ என்னுதல்; அன்றிக்கே.
1‘வாழுநாள்’ என்பதனை, மேலே வருகின்ற ‘உசாச்செல்ல’ என்றதனோடு
கூட்டலுமாம். 2தாய்தந்தையர்கள் மார்க்கண்டேயனை ஒப்பித்து விளையாட விட,
அங்கே ஓர் அசரீரி வாக்கியம் ‘இவனுக்குச் சாக்காடு குறுகிற்று’ என்று சொல்ல, அதனைக் கேட்டத்
தாய்தந்தையர்கள் வெறுக்க, ‘இதற்கு நீங்கள் அஞ்ச வேண்டா; நான் போக்கிக்கொள்ளுகிறேன்,’
என்று இவன் சென்று சிவனை அடைய, அவனும் பச்சை இடும் நாள் எல்லாம் இடுவித்துக்கொண்டு,
ஒருநாளிலே வந்தவாறே தலைக்கடையையும் புழைக்கடையையும் அடைத்துச் சடையை விரித்துக் காட்டி,
‘உன் காரியத்தைப் போன்றே ஆறல் பீறல்காண் என் காரியமும்: அருகில் மாலையைப் பாராதே என்
தலையில் சடையைப் புத்தி பண்ணாய்’ என்று காட்டி, 3‘ஆனாலும் நெடுநாள் பச்சை இட்டு
என்னைத் துதித்த நீ பேசாதே போக ஒண்ணாதே அன்றோ? உனக்கு ஒரு பற்றுக்கோடு காட்டக் காணாய்!’
என்று, சர்வேஸ்வரனுடைய சௌலப்யம் முதலிய குணங்களையும் மோட்சத்தைக் கொடுத்தல் முதலான குணங்களையும்
சொல்லிக்கொண்டு சர்வேஸ்வரன் பக்கல் ஏறச்சென்றான்.
அங்குக் கொண்டு -
4‘ஐயோ! மரண பயத்தையுடையனாய்க் கொண்டு வந்தாய் அன்றோ!’ என்று திருவுள்ளத்திலே
கொண்டு: ‘நெஞ்சிற்கொண்டு’ என்னும்படியே. அன்றிக்கே, ‘செருக்கனான
_________________________________________________________________
1. ‘வாழுநாள்’ என்பதனை,
மேலே வருகின்ற ‘உசாச்செல்ல’ என்றதனோடு கூட்டிப்
பொருள் காண்க. ‘வாழுநாள் உண்டாகைக்காக
அவனுடைய குணங்களை
உசாவிக்கொண்டு செல்ல’ என்னுதல்; ‘வாழுநாளை உசாவிக்கொண்டு செல்ல’
என்னுதல்.
2. ‘மலர்த்தொங்கல்’ என்ற
அடைமொழிக்குக் காரணம் அருளிச்செய்கிறார்,
‘தாய்தந்தையார்கள்’ என்று தொடங்கி. ஆறல்
பீறல்-காரியத்துக்குத் தகுதி இல்லாதது.
அருகில் மாலை-சடை அருகில் உள்ள மாலை.
3. சர்வேஸ்வரன் பக்கலிலே
காட்டிக் கொடுப்பதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்,
‘ஆனாலும்’ என்று தொடங்கி.
4. ‘கொண்டு’
என்பதற்கு, இரண்டு பொருள்: திருவுள்ளத்திலே கொண்டு என்பது
முதற்பொருள்; இதனையே அருளிச்செய்கிறார்
‘ஐயோ!’ என்று தொடங்கி.
அதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘நெஞ்சிற்கொண்டு
|