பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ச

234

திருவாய்மொழி - ஏழாம் பத்து

சிவன் கொண்டு வந்தான்’ என்று பாராமல், ஒரு பிராட்டி புருஷகாரமாக வருவாரைக் கைக்கொள்ளுமாறு போலே கைக்கொண்டு என்னுதல். தன்னொடும் கொண்டு-இவன் வந்த காரியத்தை முடித்து, பின்பு தன்னுடன் ஒத்த தன்மையையும் கொடுத்து. உடன் சென்றது உணர்ந்தும் - 1ஒரு ‘கள்வன்கொல்’ என்ற திருமொழியில் பிராட்டியைக் கொடுபோமாறு போலே கொடுபோனான்காணும். 2‘பின்னை என்றும் நின் திருவடிப் பிரியாவண்ணம் எண்ணிய’ என்கிறபடியே 3‘ஒரு வேறுபட்ட பொருள்’ என்று தோற்றாதபடி தன்னோடு விளைகிற ரசத்தை உண்பித்தபடியை நினைத்து, கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ?

    4
தன்னை அடைந்த இந்திரனுக்காத் தன்னைத் தாழவிட்டது ஓர் ஏற்றமோ? ‘என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ அவர்கள் இந்த மாயையினைத் தாண்டுகின்றார்கள்’ என்னக் கடவ அவன், வேறு தேவதையைத் துதிக்க, அதற்கு மேலே அவன் புருஷகாரமாகக் கொண்டு வந்து காட்டிக் கொடுக்க, ‘என்செய்வான், தன்னை அடைந்தவனை அழிய விடாதே புறம்பேயாகிலும் கொண்டு போய் இரட்சிப்பித்தான்’ என்னும் குணம் சிவனுக்கு உண்டாக,

____________________________________________________________________

என்னும்படியே’ என்று, இது, பெரிய திருமொழி, 5. 8 : 4. என்றது, ‘தண்ணியனாய் இருக்கிற இவனுக்கு நாம் அல்லது வேறு புகல் இல்லை,’ என்று நெஞ்சிலே கொண்டு என்றபடி. ‘அவனை ஏற்றக்கொண்டு’ என்பது இரண்டாவது பொருள்; இதனையே அருளிச்செய்கிறார், ‘செருக்கனான’ என்று தொடங்கி.

1. ‘உடன் சென்றது’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘ஒரு கள்வன்கொல்’ என்று
  தொடங்கி. இது, பெரிய திருமொழி, 3 : 7.

2. ‘ஒத்த தன்மையைக் கொடுத்தானோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘பின்னை’ என்று தொடங்கி. இது, பெரிய திருமொழி. 5. 8. 6. என்றது,
  மரணபயத்தையே ஒழித்ததற்கு மேலே, தன் திருவடியை நாளும் பிரியாதபடி
  இருப்பதற்குத் திருவுள்ளம் பற்றியதைத் தெரிவித்தபடி.

3. இதற்குப் பொருள் அருளிச்செய்யாநின்றுகொண்டு, திருப்பாசுரத்திற்கு அந்வயம்
  காட்டுகிறார், ‘ஒரு வேறுபட்ட’ என்று தொடங்கி.

4. மேல் திருப்பாசுரத்தைக்காட்டிலும் இத்திருப்பாசுரத்தின் ஏற்றத்தை அருளிச்செய்கிறார்,
  ‘தன்னையடைந்த’ என்று தொடங்கி.

        ‘மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரத்தி தே’

என்பது, ஸ்ரீ கீதை, 7 : 14.