பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ம

238

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    மாயம் அறிபவர் - 1அவனுடைய செயல்கள் முழுதும் தன்னை அடைந்தவர்களின்பொருட்டாய் ஆச்சரியமாய் இருக்கும் என்று அறியுமவர்கள். மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ-அடியவர்கட்குப் பரதந்திரப்பட்டவனுக்கு அன்றி ஆள் ஆவரோ? தாயம் செறும் ஒரு தூற்றுவர் மங்க - தாயபாகம் சம்பந்தமாகச் செறுகிற துரியோதனாதியர்களான தீயோர் கூட்டம் மங்க. 2தாயம் கொண்டு நெருக்கிற்றுத் தம்மையோ? அநுகூலரான பாண்டவர்களை நெருக்கிற்றுத் தம்மை நெருக்கிற்றாய் இருக்கிறபடி. ஒரு நூற்றுவர், ஓர் ஐவர் - 3நெருக்குகிறவர்களும் நெருக்குண்கிறவர்கள் இருக்கிறபடி. ஓர் ஐவர்க்காய் - 4தீயோர் திரள் முழுதும் அங்கே திரண்டு ஒரு சாரதியை ஒழிய வேறு துணை இன்றிக்கே இருக்கிறவர்கள்.

    5
‘தன்வழியே ஒழுகாதவர்களை அழியச்செய்து, தன்னை ஒழிய அறியாதவர்களுக்காகத் தான் தாழ நின்று நோக்கினான். அன்றிக்கே, சம்பந்தம் இரண்டு தலைக்கும் ஒத்திருக்க, தாழ்ந்த தலை கண்டு நோக்கினானித்தனை அன்றோ?’ என்னுதல், 6‘கண்ணனுடைய திருவடிகள் அருச்சுனனுடைய மடியில் இருப்பதைப் பார்த்தேன்;

____________________________________________________________________

1. ‘தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று’ என்றதற்குத் தகுதியாக ‘மாயம் அறிபவர்’
  என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘அவனுடைய’ என்று தொடங்கி.

2. ‘செறும்’ என்று பொதுவாகக் கூறியதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘தாயம்’ என்று
  தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார், ‘அநுகூலரான’ என்று தொடங்கி.

3. ‘நூற்றுவர், ஐவர்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார் ‘நெருக்குகிறவர்களும்’
  என்று தொடங்கி. என்றது, ‘இவர்களுடைய வலிமையையும் வலியின்மையையும்
  காட்டுகிறது’ என்றபடி.

4. ‘ஓர்’ என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘தீயோர்’ என்று தொடங்கி.

5. ‘சம்பந்தம் ஒத்திருக்க, பாண்டவர்களைக் காத்துத் துரியோதனாதியர்களை அழிப்பான்
  என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘தன் வழியே’ என்று தொடங்கி.
  வேறும் ஒரு பரிகாரம் அருளிச்செய்கிறார் ‘சம்பந்தம்’ என்று தொடங்கி.

6. ‘ஐவர்க்காய்’ என்பதிலுள்ள ‘ஆய்’ என்பதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘கண்ணனுடைய’ என்று தொடங்கி.

    ‘அர்ஜூநாங்க கதௌ பாதௌ கேஸவஸ்ய உபலக்ஷயே
    அர்ஜூநஸ்ய து க்ருஷ்ணாயா: ஸூபாயா: ச அங்ககாவுபௌ’

என்பது, பாரதம், உத்யோக பர்.