பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அ

ஐந்தாந்திருவாய்மொழி - பா. 10

239

அருச்சுனனுடைய கால்கள் கற்புக்கரசியாக திரௌபதியினுடைய மடியில் இருப்பதைப் பார்த்தேன்,’ என்கிறபடியே, 1ஒருவர்க்கு ஒருவர் கால்மேல் கால் ஏறட்டு ஒருநாளாக இருந்த சமயத்திலே ‘சஞ்சயன் வாசலிலே வந்தான்’ என்று சொல்ல, ‘அவனைப் புகுர’ விடுங்கோள்; இவ்விருப்புக் காண உகப்பான் ஒருவன்; 2உகவாதார் நெஞ்சு உளுக்கச் சொல்ல வல்லான் ஒருவன்; ஆன   பின்னர் அவனை அழையுங்கோள்,’ என்றான். உகவாதார் கண் படல் ஆகாதாவறு போன்று, உகந்தார் கண்பட்டால் உள்ள நன்மையும்; இப்படி அன்றோ பாண்டவர்கள் விஷயத்தில் அவன் இருக்கும்படி?

    தேசம் அறிய ஓர் சாரதியாய் - 3‘அருச்சுனன் ரதியாகவும் தான் சாரதியாகவும் எல்லா உலகத்திலுள்ளவர் கண்களுக்கு இலக்கானான்’ என்னும்படியே, ‘இன்னார் தூதன் என நின்றான்’ என்கிறபடியே. 4உலகத்தில் சுவாதந்திரியமும் பாரதந்திரியமும் முறை மாறின இடத்திலும் இரஹஸ்யத்திலே அன்றோ அவை நடப்பன? கணவனும் மனைவியும் காலைப் பிடிப்பதும் இரஹஸ்யத்திலே அன்றோ? இப்படி இருக்கச்செய்தே அன்றோ உலகப் பிரசித்தமாம்படி தன்னைத் தாழவிட்டது? சென்று சேனையை நாசம் செய்திட்டு - 5‘இதுதானும் அருச்சுனன் முதலாயினோர் அம்பு

___________________________________________________________________

1. மேலே காட்டிய சுலோகத்திற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘ஒருவர்க்கு ஒருவர்’
  என்று தொடங்கி.

2. ‘இவ்விருப்பில் அவனை அழைக்க வேண்டுவான் என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘உகவாதார்’ என்று தொடங்கி.

3. சாரதியாய் நின்றதற்குப் பிரமாணங்கள் இரண்டு காட்டுகிறார், ‘அருச்சுனன்’
  என்று தொடங்கியும், ‘இன்னார்’ என்று தொடங்கியும்.

        ‘பார்த்தம் ரதிநம் ஆத்மாநம்ச ஸாரதிம் ஸர்வலோக
        ஸாக்ஷிகம் சகார’

என்பது, கீதா பாஷ்யம்.

     
‘இன்னார் தூதன்’ என்பது, பெரிய திருமொழி, 2. 2 : 3. இரண்டு
  பிரமாணங்கள் காட்டியதற்குக் கருத்து, ‘தூதுவனாகியது எல்லாவுலகத்திலும்
  பிரசித்தமானாற்போல, சாரதியாய் நின்றதுவும் எல்லாவுலகங்கட்கும் பிரசித்தமாயிற்று,’
  என்றது.

4. ‘உலகம் அறியச் சாரதியாய் நின்றது இவனுக்கு ஓர் ஏற்றமோ?
  உலகத்திலுள்ளவர்களும் இப்படிச் செய்யார்களோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘உலகத்தில்’ என்று தொடங்கி.

5. ‘அருச்சுனன் முதலாயினோர் அன்றோ சேனையை அழித்தது?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘இதுதானும்’ என்று தொடங்கி.