பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

கள

240

திருவாய்மொழி - ஏழாம் பத்து

களாலே அன்று’ என்றபடி. 1‘ஆயுதம் எடுக்க ஒண்ணாது’ என்று வேண்டிக்கொண்டபடியாலே, சாரதியாயிருந்து தேர்க்காலாலே உழக்கிப் போகட்டான். நடந்த நல்வார்த்தை அறிந்தும் - 2தன் மேலே அம்பு மழையாகப் பெய்கிற இத்தண்ணிய பூமியினின்றும் தன் வரவுக்கு எதிர்கொள்வார் இருந்த இடத்தே போய்ப் புக்கான் என்கிற பெரிய வார்த்தையை அறிந்தும். 3‘நீண்ட கண்களையுடைய கண்ணபிரான் பூமியினுடைய பாரத்தைப் போக்கி உலகத்தை எல்லாம் மோஹிக்கச்செய்து மேலான தம் இருப்பிடத்தை அடைந்தார்’ என்கிறபடியே, துரியோதனாதியர்கள் இல்லாத இடத்தே போய்ப் புகப்பெற்றது அன்றோ?

    4
‘மேலே கூறிய செயல்கள் அடங்கலும் தன் சுவாதந்திரியம் கிடக்கச்செய்தே செய்தவை அன்றோ? 5தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதற்குத் திரு உகிராலும் உண்டே அங்கு; அவை போல அன்றே இங்கு? தன்னை அடைந்தவர்க்குப் பரதந்திரனாய்த் தன்னை அழிய மாறி, பாண்டவர்களுக்கு உடம்புக்கு ஈடு இடாதே எதிரிகள் அம்புக்கு இலக்கு ஆக்கின இந்நீர்மைக்குப் போருமோ. மேலே கூறிய குணங்கள்?’ என்கிறார்.

(9)

_________________________________________________________________

1. சாரதியாய் இருந்து சேனையை அழித்ததற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்,
  ‘ஆயுதம்’ என்று தொடங்கி.

2. ‘பரமபதத்திற்குப் போனது நல்வார்த்தை ஆயினவாறு யாங்ஙனம்?’ என்ன,
  ‘தன்மேலே’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘நல்வார்தை
  -பெரிய வார்த்தை.

3. போயினமைக்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘நீண்ட’ என்று தொடங்கி.

    ‘க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந:
    மோஹயித்வா ஜகத் ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநமுத்தமம்’

என்பது, பாரதம், மௌசல். பர்.  இந்தச் சுலோகத்திலுள்ள ‘உத்தமம்’ என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘துரியோதனாதியர்கள்’ என்று தொடங்கி.

4. மேல் திருப்பாசுரத்திற்கூறிய பொருளைக்காட்டிலும் இத்திருப்பாசுரத்திற்கூறிய
  பொருளுக்கு ஏற்றத்தை அருளிச்செய்கிறார், ‘மேலே’ என்று தொடங்கி.

5. ‘நரசிங்கத்துக்குச் சுவாதந்திரியம் உண்டோ?’ என்ன, ‘தன்னை’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார். ஈடு-மெய்புகு கருவி; கவசம்.