New Page 1
|
ஐந்தாந்திருவாய்மொழி - பா.
11 |
245 |
பொ - ரை :
ஞானத்தைப் பெற்று அந்த ஞானத்திற்கு இடையீடு இல்லாமல் நின்ற அடியார்கட்கு மோக்ஷ உலகத்தைத்
தருகின்ற ஞானமே சொரூபமான கண்ணபிரானை. அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே
அருளிச்செய்யப்பட்ட தெளிந்த ஆயிரம் திருப்பாசுரங்களுள் இவை பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள்,
பரந்திருக்கின்ற மூன்று உலகத்திற்குள் தெளிந்த சிந்தையினையுடையராவர்.
ஈடு :
முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்று வல்லவர்கள் சம்சாரத்துக்குள் இருந்து வைத்தே
சுத்த பாவர்’ என்கிறார்.
தெளிவுற்று வீவு இன்றி
நின்றவர்க்கு-‘பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் அவனே’ என்று அறுதியிட்டு, பின்னர் 2நாட்டார்
செயல்களைக் கண்டாதல், போலி வார்த்தைகளைக் கண்டாதல் பிற்காலியாதே நின்றவர்களுக்கு.
3பாரதப் போரிலே நின்று அருச்சுனனை நோக்கி, ‘நான் சொன்ன இது உனக்குத் தொங்கிற்றோ?
எதிரே போந்ததோ?’ என்ன, 4‘நிலைபெற்றேன்’ என்ன, அவன், ‘ஆனால் நம் காரியம்
செய்யப் பார்த்தது என்?’ என்று கேட்க, 5‘உன்னுடைய வார்த்தையின்படி செய்கிறேன்’
என்கிறபடியே, ‘தேவரீர் ஏவின அடிமை செய்யக் கடவேன்,’ என்றான் அன்றோ? 6‘அருச்சுனன்தான்
எம்பெருமானைப் பெற்றானோ,
____________________________________________________________________
1. ‘பாமரு மூவுலகத்துள்ளே தெளிவுற்ற
சிந்தையர்’ என்றதனைக் கடாட்சித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘அவனே உபாய உபேயங்கள்
என்று அறுதியிட்டவனுக்குப் பின் வீவுக்குக்
காரணம் யாது?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘நாட்டார்’ என்று
தொடங்கி. நாட்டார் செயல்களாவன, சாதன அநுஷ்டானங்கள். போலி
வார்த்தைகளாவன:
உபாயபல்குத்துவம் - சாதனம் சிறிதாய் இருத்தல், உத்தேஸ்ய
துர்லபத்துவம் - பேறு கிடைத்தற்கு
அரியதாய் இருத்தல், ஸ்வகிருததோஷபூயஸ்த்வம்
-தன்னால் செய்யப்பட்ட பாவங்கள் பலவாக இருத்தல்
என்னுமிவை.
3. ‘அப்படிப் பிற்காலியாமல்
நின்ற பேர் உளரோ?’ என்ன’ அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘பாரதப் போரிலே’ என்று தொடங்கி.
‘தொங்கிற்றோ?’ என்றது,
‘உறுதியாகத் தங்கியிருக்கின்றதா?’ என்றபடி. ‘எதிரே போந்ததோ?’
என்றது,
‘எதிர்த்ததோ?’ என்றபடி. அதாவது, ‘பொருத்தமில்லாததாகப்பட்டதோ?’ என்றபடி,
4. ‘ஸ்த்திதோஸ்மி’ என்பது,
ஸ்ரீ கீதை, 18 : 73.
5. ‘கரிஷ்யே வசநம் தவ’
என்பது, ஸ்ரீ கீதை, 18 : 72.
6.
‘அருச்சுனன்’ என்று தொடங்கும் வாக்கியம், இடைப்பிறவரல்.
|