இல
246 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
இல்லையோ?’ என்று
நம்பிள்ளை சீயரைக் கேட்க, ‘உமக்கு அது கொண்டு காரியம் என்? இது சொன்னவன் எல்லார்க்கும்
பொதுவானவனாகில், பகவானுடைய வார்த்தை என்னுமிடம் நிச்சயமாகில். தங்கள் தங்களுடைய கர்மங்கட்குத்
தகுதியாகவும் ருசிக்குத் தகுதியாகவும் பெறுகிறார்கள்; பெற்றவர்களை ஆராய்ந்து பார்த்து அதனாலே
அன்றே நாம் பற்றப் பார்க்கிறது?’ என்று அருளிச்செய்தார். 1சேர்ந்து குளிர்ந்த
தண்ணீர் இருந்தால், அது குடித்துத்தாகம் கெட்டவனைக் கண்டு அன்றே தாகம் கொண்டவன் தண்ணீர்
குடிப்பது? இன்பக் கதி செய்யும் - தனக்குமேல் ஒன்று இல்லாததான ஆனந்தத்தோடு கூடிய பேற்றினைப்
பண்ணிக் கொடுக்கும், தெளிவுற்ற கண்ணனை -இவன் தெளியமாட்டாத இழவு தீர இவனுக்கு நித்தியமான
கைங்கரியத்தைக் கொடுக்கையிலே தான் தெளிந்தபடி இருக்கும் கண்ணபிரானை. 2‘நான்
நினைக்கிறேன்’ என்பது போலே.
தெளிவுற்ற ஆயிரம்
- 3மலையிலே கலங்கின நீரானது ஒரோ பிரதேசங்களில் வந்து தெளிந்து உபயோகத்திற்குத்தகுதியாமாறு
போலே ஒரு சிலரே ஓதத் தகுந்ததாய்க் கூளமும் பாலப்பசினும்
______________________________________________________________________
1. அதற்கே வேறும் ஒரு திருஷ்டாந்தம்
காட்டுகிறார், ‘சேர்ந்து’ என்று தொடங்கி.
2. அவன் தெளிந்திருப்பதற்குத்
திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘நான் நினைக்கிறேன்’
என்று.
‘ஸ்திதே மநஸி ஸூஸ்வஸ்தே
சரீரே ஸதி யோநர:
தாதுஸாம்யே ஸ்திதே
ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்’
‘ததஸ்தம் ம்ரியமாணந்து
காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மித்பக்தம்
நயாமி பரமாம் கதிம்’
என்பன, வராஹசரமம்.
3. ‘திருவாய்மொழிக்குத்
தெளிவுறுகையாவது யாது?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘மலையிலே’ என்று தொடங்கி.
‘மண்ணாடின ஸஹ்ய ஜலம் தோதவத்திச்
சங்கணித் துறையிலே துகில்
வண்ணத் தெண்ணீராய அந்தஸ்தத்தைக் காட்டுமாபோலே அல்ப ஸ்ருதர்
கலக்கின ஸ்ருதி நன்ஞானத்துறை சேர்ந்து தெளிவுற்று ஆழ் பொருளை
அறிவித்தது,’ என்பது, ஆசார்யஹ்ருதயம்,
சூத். 71.
‘அந்த மிலாமறை ஆயிரத்து
ஆழ்ந்த அரும்பொருளைச்
செந்தமி ழாகத் திருத்தில
னேல்நிலத் தேவர்களும்
தந்தம் விழாவும் அழகும்என்
னாம்தமி ழார்கவியின்
பந்தம் விழாஒழு கும்குரு கூர்வநத
பண்ணவனே.’
என்றார் கம்பநாடரும்.
சடகோபரந். 14.
|