New Page 1
ஐந்தாந்திருவாய்மொழி - பா.
11 |
247 |
போலே ஒன்றே அறுதியிட்டுப்
பிரிக்க ஒண்ணாதபடியாயிருக்கிற வேதார்த்தாமானது, எல்லாரும் படிக்கத்தகுந்ததாய் எல்லா ஐயங்களும்
தீர்ந்து தெளிந்தது அவர் பக்கலிலே வந்தவாறே. இவை பத்தும் வல்லார் அவர் தெளிவுற்ற சிந்தையர்-இத்திருவாய்மொழியைக்
கற்க வல்லவர்கள், இவ்வாழ்வார்தம்மைப் போலே தெளிவுற்ற நெஞ்சினையுடையராவர். ‘அப்படித் தெளிவது
தேச விசேடத்திலே போனாலோ?’ என்னில், பாமரு மூவுலகத்துள்ளே - ‘பாபம் நிறைந்திருக்கிற தேசத்திலே’
என்றபடி. 1அவ்வருகே ஒரு தேச விசேடத்தே போனால் பெறக்கடவே தெளிவை அதற்கு எதிர்த்தட்டான
இங்கே இருந்தேயுடையராவர்; 2‘சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக
மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே தெளிவுற்ற சிந்தையர்: குற்றங்களுக்கு எல்லாம்
எதிர்த்தட்டான பரமாத்துமாவையும் தன் வழி ஆக்க வல்ல இவ்விபூதியிலே இருந்து வைத்தே சுத்த பாவராய்
இருப்பர். பாபம் என்பது, ‘பா’ எனக் கடைக்குறைந்து நிற்கிறது.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
கற்றோர் கருதும் விசயங்
களுக்கெல்லாம்
பற்றாம் விபவகுணப்
பண்புகளை-உற்றுணர்ந்து [ சொல்
மண்ணிலுள் ளோர் தம்மிழவை
வாய்ந்துரைத்த மாறன்
பண்ணிலினி தானதமிழ்ப்
பா
(65)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
______________________________________________________________________
1. ‘மூவுலகத்துள்ளே’ என்ற
ஏகாரத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ’அவ்வருகே’
என்று தொடங்கி.
2.
‘’இங்கே இருந்தே’ என்கைக்கு, இவ்வுலகின் தன்மை யாது?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்,
‘சர்வேஸ்வரன்’ என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்,
‘குற்றங்களுக்கு’ என்று தொடங்கி,
|