பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

250

திருவாய்மொழி - ஏழாம் பத்து

காரியம் நன்றாக விழுந்தது; அரசர்கள் கூட்டம் இப்படி விரையப்பெறுவதே!’ என்று அதிலே மிகுந்த உவகையனாய், அந்த உவகையை நெஞ்சிலே இட்டுவைத்து, ‘அதனை இவர்கள் வாயாலே சொல்லக் கேட்கலாகாதோ?’ என்று நினைத்து, ‘வாரீர்கோள்! அறுபதினாயிரம் ஆண்டு அரசைச் செலுத்துகிற இடத்து. இற்றைவரை எனக்கு என்று ஒரு சுகத்தைக் கோலாதே உங்கள் இரட்சணத்துக்கு ஆமவையே தேடிக்கொடு போந்த நான். ஒரு வார்த்தை சொன்னால், ‘இப்போது நீ இருந்தாயாகில் வீகம் என்? கிரமத்திலே செய்து கொள்ளுகிறோம்,’ என்னதல்: அன்றாகில், ‘உனக்குப் பிரியமாகில் அப்படிச் செய்யலாகாதோ?’ என்று ஒருவார்த்தை சொல்லி ஆறியிருத்தல் செய்கை ஒழிய, படுகொலைக்காரர் கையிலே அகப்பட்டார், ‘தப்ப வேணும்’ என்று பார்க்குமாறு போலே நீங்கள் இங்ஙன் கூப்பிடுகைக்கு நான் செய்த குற்றம் என்?’ என்ன,

    1
‘ஓஅரசனே! உன் பிள்ளையான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன’ என்கிறபடியே, ‘எதிரிகள் அம்பால் அழியப்பெற்றது இல்லை உன்னுடைய தேசம்; உன் மகனுடைய குணத்தாலே நாட்டைப் படுகொலைக்குத்தினாய்காண் நீ,’ என்றார்கள் ஆயிற்று. என்றது, 2‘நாங்கள் குணங்களால் வெல்லப்பட்டவர்களாய் இவ்வார்த்தை சொன்னோமித்தனை அல்லது ஒரு காரியபுத்தியோடு சொன்னோம் அல்லோங்காண்,’ என்றார்கள் என்றபடி. 3‘தாதுக்களுக்கு இமயமலை போன்று குணங்களுக்குப் பிறப்பிடமாய் இருக்கின்றான், ஒருவராலும் அசைக்கக்கூடாத ஆற்றலையுடையனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே, 4தாதுக்களானவை ‘இன்ன மலையிற்பொன்’ என்றவாறே விலை போமாறு

___________________________________________________________________

1. ‘தே தம் ஊசு: மஹாத்மாநம் பௌரஜாபதைஸ்ஸஹ
  பஹவோ ந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்தி தே’

என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.

2. அதனை விவரணம் செய்கிறார், ‘நாங்கள்’ என்று தொடங்கி.

3. வேறும் ஒரு பிரமாணம் காட்டுகிறார், ‘தாதுக்களுக்கு’ என்று தொடங்கி.

    ‘ஜ்ஞாந விஜ்ஞான ஸம்பந்நோ நிதேஸே நிரத: பிது:
     தாதுநாம் இவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்’

என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.

4. இந்தச் சுலோகத்துக்குப் பாவம் அருளிச்செய்கிறார், ‘தாதுக்களானவை’ என்று
  தொடங்கி.