பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஆறாந்திருவாய்மொழி - முன்னுரை

249

விடத்து, அவற்றை அப்போதே கிட்டி அனுபவிக்கப் பெற்றால் மிகவும் துக்கித்தவராய்ச் சர்வேஸ்வரனுக்குப் பரமபதத்திலும் இருப்பு அரிதாம்படி ஆர்த்தியாலே நிரம்பிற்று. ஒரு கடல் கையெடுத்துக் கூப்பிடுமாறு போலே கூப்பிடுகிற கூப்பீடு கேட்டு அவ்விருப்புக் குலைந்து வந்து முகங்காட்ட வேண்டும்படி, அவன் 1பிராப்பியனாய் இருக்கிறபடியையும் பிராபகனாய் இருக்கிறபடியையும் விரோதிகளை அழிக்கும் தன்மையனாய் இருக்கிறபடியையும் சொல்லி, கேட்டாரடைய நீராகும்படி பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்.

    2
‘பஹவோ ந்ருப’ - சக்கரவர்த்தி, ‘பெருமாளைத் திருமுடிசூட்ட’ என்று கோலி, ‘அறுபதினாயிரம் ஆண்டு ஒரு தலை மிதிக்க ஒரு தலை மேல் எழும்படியான இராச்சியத்தை வருந்தி ஒருபடி அடிப்படுத்தினோம்; இதனை ஒரு சிறு பிள்ளையின் தலையிலே வைத்தால் பொறுக்குமோ, போறாதோ?’ என்று விசாரித்து, ‘இதனை உலகத்தோடே கூட்டிப் பார்ப்போம்’ என்று கோலி, அரசர்கள் எல்லாரையும் திரட்டி, ‘நான்  இங்ஙனே பெருமாளைத் திருமுடிசூட்டப் பாராநின்றேன்: உங்களுக்கு இஷ்டமோ, இன்றோ?’ என்று கேட்க, உடனே, 3‘கிழவா! போகாய்’ என்ன, 4‘நாம் ஒருப்பட்ட

____________________________________________________________________

1. இத்திருவாய்மொழியில் வருகிற ‘தாமரைக் கண்ணாவோ’ என்றதனைத் திருவுள்ளம்
  பற்றி, ‘பிராப்பியனாய்’ என்று தொடங்கியும், ‘வந்து எய்துமாறு அறியேன்’
  என்றதனைத் திருவுள்ளம் பற்றிப் ‘பிராபகனாய்’ என்று தொடங்கியும், ‘விறல்
  மாலியைக் கொன்று’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘விரோதிகளை’ என்று
  தொடங்கியும் அருளிச்செய்கிறார். பிராப்பியன்-அடையத் தக்கவன். பிராபகன்
  -அடைவதற்கு வழியாய் இருப்பவன்.

2. ‘குணங்களை அனுபவிக்கப் பெறாவிட்டால் கூப்பிட வேண்டுமோ?’ என்ன,
  ‘திருவயோத்தியையிலுள்ளாரையும் ஈடுபடுத்தாநின்றால் இவரால் ஆறி இருக்கப்
  போமோ?’ என்று கூறத் திருவுள்ளம் பற்றி, ‘அவர்கள் அப்படிக்குணங்களில்
  ஈடுபட்டார்களோ?’ என்ன, ஈடுபட்டமைக்குப் பிரமாணமும் பிரமாணத்திற்கு
  அவதாரிகை முன்னாகப்  பொருளும் அருளிச்செய்கிறார், ‘பஹவோ ந்ருப’
  என்று தொடங்கி. இங்குக் கூறுகின்ற அவதாரிகையோடு, கம்பராமாயணம்,
  அயோத்தியா காண்டம், மந்திரப்படலம் 13 முதல் 44 முடியவுள்ள செய்யுள்களைப்
  படித்து இன்புறல் தகும்.

3. ‘கிழவா போகாய்’ என்றது

    ‘அநேகவர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்தஸ்த்வம் அஸி பார்த்திவ
     ஸராமம் யுவராஜாநம் அபிஷிஞ்சஸ்வ பார்த்திவம்’

(ஸ்ரீராமா. அயோத். 2 : 21 .)
என்றதனைத் திருவுள்ளம் பற்றி.

4. ‘கதம்நு மயி தர்மேண ப்ருதிவீம் அநுஸந்ஸதி
   பவந்தோத்ரஷ்டும் இச்சந்தி யுவராஜம் மமாத்மஐம்’

என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 25.