பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

உன

252

திருவாய்மொழி - ஏழாம் பத்து

உன்னை, உன்னாலே உபகாரம் கொண்டு உன் சுவடு அறிந்த நான் கிட்டுவது அன்றோ?’ என்கிறார்.

    பாமரு மூன்று உலகும் படைத்த பற்பநாபாவோ - பா என்பது, தேவர் மனிதர் முதலான பொருள்களைக் காட்டுவதாய், பா மருவி இருந்துள்ள; அதாவது, ‘பொருள்களினுடைய நெருக்கத்தையுடையவான மூன்று உலகு’ என்னுதல். அன்றிக்கே, ‘பாபம் மருவி இருந்துள்ள மூன்று உலகு’ என்னுதல்: பாபம் என்றது, ‘பா’ எனக்கடைக்குறைந்து வந்தது. அன்றிக்கே, ‘பா’ என்று பரம்புதலாய், ‘பரப்பையுடையவான மூன்று உலகு’ என்னுதல். ‘மூன்று உலகு’ என்று, கீழும் மேலும் நடுவுமான உலகங்களைச் சொல்லுதல். அன்றிக்கே, கிருதகம், அகிருதகம், கிருதகாகிருதகம் என்று இவ்வகையிலே ஆக்கிச் சொல்லுதல். 1‘என் தாயே’ என்பாரைப் போலே ‘படைத்த பற்ப நாபாவோ!’ என்கிறார். 2இதனை உண்டாக்குகைக்கு அடியான சம்பந்தமேயாய், இனிமை இன்றிக்கே ஒழிந்ததாகில்தான் நான் ஆறி இரேனோ? 3நீ இதனை வருந்திப் படைத்தது அழிக்கைக்காகவோ? அன்றிக்கே, 4இல்லாத பொருள்களை உண்டாக்கக்கூடிய நீ, உள்ள பொருளை அழிக்கிறது என்?’ என்னுதல்.

    பாமரு மூன்று உலகும் அளந்த பற்ப பாதாவோ - 5இவற்றை உண்டாக்கி ‘மேல் பட்டது படுகிறது’ என்று இருந்தாயாகில்தான் ஆறி இரேனோ? பெற்ற தாய் வளர்க்குமாறு போலே இவற்றைக் கண்களிலே வெண்ணெய் இட்டுக்கொண்டு நோக்குமவன் அல்லையோ? மஹாபலி போன்றவர்கள் இறாஞ்சினாற்போலே

______________________________________________________________________

1. ‘படைத்த பற்பநாபாவோ’ என்று காரணத்துவத்தை இட்டு விசேடிக்கையாலே
  கிடைத்த பொருள் சம்பந்தம் என்னும் இடம் தோற்ற அருளிச்செய்கிறார், ‘என்
  தாயே’ என்று தொடங்கி.

2. ‘பற்பநாபாவோ’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘இதனை’ என்று
  தொடங்கி.

3. ‘நாபாவோ’ என்றதிலேயுள்ள ஓகாரத்துக்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘நீ
  இதனை’ என்று தொடங்கி.

4. வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார், ‘இல்லாத’ என்று தொடங்கி.

5. படைத்தலைக் கூறிய பின், ‘அளந்த’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
  ‘இவற்றை’ என்று தொடங்கி.