இத
ஆறாந்திருவாய்மொழி -
பா. 1 |
253 |
இதனைக் கவர்ந்து கொண்டால்
எல்லை நடந்து மீட்டுக்கொள்ளுமவன் அன்றோ நீ? 1‘படிக்கு அளவாக நிமிர்த்த நின்
பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்று ஆசையுடைய நான் இருக்க, இச்சை இல்லாதார் தலைகளிலே திருவடியை
வைப்பதே!’ ‘அது செய்தமை உண்டு, உமக்கு இப்போது விருப்பம் என்?’ என்ன, அருளிச்செய்கிறார்
மேல்:
தாமரைக் கண்ணாவோ
- 2‘கடாட்சித்தைத் தருதலாலே மறுபடியும் என்னைக் காப்பாற்றி அருளவேண்டும்,’ என்னமாறு
போலே ‘திருக்கண்களாலே நோக்கவேணும்’ என்கிறார். 3தோன்றுதலும், வளர்தலும்,
வாழ்தலும் எல்லாம் உன் பக்கலிலேயாயிற்று, தனியேன் தனி ஆளாவோ - 4ஆக, திருக்கண்களின்
அழகை அநுசந்தித்தார்; அக்கண்ணழகே தாரகமாக இருக்கும் நித்தியசூரிகள் திரளிலே தம்மை இருக்கக்
கண்டிலர்; அதனாலே ‘தனியேன்’ என்கிறார். 5‘பெண்களுடைய நோக்கே தாரகமாக
இருக்குமவர்களுடைய திரளுக்கும் கூட்டு அன்றிக்கே, உன் நோக்கே தாரகமாக இருக்கும் அவ்விபூதியிலுள்ளாருடனும்
கூட்டு ஆகாதே, என்னை மூன்றாம் விபூதியாக்கி ஆளுகிறவனே!’ என்பார், ‘தனி ஆளாவோ’ என்கிறார்.
அன்றிக்கே, ‘உன் கிருபையே தாரகமாக இருக்கிற என்னை உன் கிருபைக்கு என்னை ஒழிய வேறு விஷயம்
இல்லையாம்படி
______________________________________________________________________
1. ‘பாதாவோ’ என்றதிலேயுள்ள
ஓகாரத்திற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘படிக்களவாக’ என்று தொடங்கி. ‘படிக்கு அளவாக’
என்பது, திருவாய். 9. 2 : 2.
2. கண்களின் அழகைச்
சொன்னதற்கு பாவம் அருளிச்செய்கிறார் ‘கடாட்சத்தை’
என்று தொடங்கி.
‘அவலோகந தாநேந
பூயோ மாம் பாலய அவ்யய’
என்றது, ஸ்ரீவிஷ்ணு புரா. 16. 20
: 1.
3. மேல் இரண்டு அடிகளையும்
கூட்டிக்கொண்டு, ‘தாமரைக் கண்ணாவோ’
என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘தோன்றுதலும்’
என்று தொடங்கி.
4. கண்களின் அழகைச்
சொன்னதன் பின், ‘தனியேன்’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ’ஆக’ என்று தொடங்கி.
‘தாமரைக் கண்ணனை விண்ணோர்
பரவும் தலைமகனை’ (திருவாய். 2. 6 : 3.) என்றதனைத் திருவுள்ளம்
பற்றி,
‘அக்கண்ணழகே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
5. ‘தனி
ஆளாவோ’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘பெண்களுடைய’
என்று தொடங்கி.
|