ஆளுக
254 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
ஆளுகிறவனே’ என்றுமாம்.
தாமரைக் கையாவோ-1அக்குரூரனைப் போன்று போரேனோ? 2‘ஸோப்யே நம்’
திருக்கையில் அடையாள மித்தனையும் இலச்சினைப்படி அவன் உடம்பிலே காணலாம்படி அவனைத் தீண்டி
அவன் ஸ்பரிசத்தாலே செயல் அற்றவனாய் நிற்கையாலே கையைப் பிடித்து ஏறட்டு, பின்னை அணைக்கைக்கு
இருவரைக் கண்டது இல்லை. 3‘மிருதுவான கைகளால் கண்டாகர்ணனுடைய சரீரத்தையும் கூட
எல்லாவிடத்திலும் தொட்டருளினார்,’ என்கிறபடியே.
உன்னை என்றுகொல்
சேர்வதுவே - 4‘பதினான்கு ஆண்டுகளும் முடிந்தபின் பஞ்சமி திதியில்’ என்று நாள்
இட்டுக்கொடுக்கலாவது தம்பிமார்க்கோ? உனக்கே உரியரான அடியார் ஆனால் ‘இன்ன நாள் பெறக்கடவது’
என்று ஒருநாள் இட்டுக் கொடுக்கல் ஆகாதோ? 5அடியன் ஆகில் தலைவன் கொடுத்த நாள்
பெறக்
____________________________________________________________________
1. திருக்கைகளை வர்ணிப்பதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘அக்குரூரனை’ என்று
தொடங்கி.
2. அதற்குப் பிரமாணமும்
பிரமாணத்திற்குப் பொருளும் அருளிச்செய்கிறார்,
‘ஸோப்யேநம்’ என்று தொடங்கி.
‘ஸோபி ஏநம் த்வஜ
வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா
ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச
ப்ரீத்யா ஸூகாடம் பரிஷஸ்வஜே’
என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 18 : 2.
இந்தச் சுலோகத்திலுள்ள
‘ஸம்ஸ்ப்ருஸ்ய’ என்றதற்குப் பொருள்
அருளிச்செய்கிறார், ‘திருக்கையில்’ என்று தொடங்கி.
‘ஆக்ருஷ்ய’ என்றதற்குப்
பொருள் அருளிச்செய்கிறார், ‘அவன் ஸ்பரிசத்தாலே’ என்று தொடங்கி.
‘ஸூகாடம்’
என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘இருவரைக் கண்டது இல்லை’ என்று.
3. வேறும் ஒரு பிரமாணம்
அருளிச்செய்கிறார், ‘மிருதுவான’ என்று தொடங்கி.
பஸ்பர்ஸ அங்கம்
ததா விஷ்ணு: பிஸாசஸ்ய அபி ஸர்வத:’
கரேண ம்ருதுநா தேவ:
பாபந்நிர்மோசயந் ஹரி:’
என்பது, ஹரி வம்ஸம்.. 275 :
15.
4. ‘’என்றுகொல்’ என்கைக்கு
நாம் யார்க்கு நாள் இட்டுக் கொடுத்தோம்?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘பதினான்கு’ என்று தொடங்கி.
‘பூர்ணே சதுர்த்தஸே
வர்ஷே பஞ்சம்யாம்’
என்பது, ஸ்ரீராமா. யுத். 127 :
1.
5. ‘நாம்
செய்தனைக் கண்டிருக்க வேண்டாவோ?’ என்ன, ‘அடியன் ஆகில்’ என்று
தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
|