பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

256

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1’வேறு விஷயங்களிலே நோக்கு உள்ளவர்களாய்ப் புறம்பே தாரகம் முதலானவைகளாம்படி இருக்கின்றவர்களுக்குங்கூட விரும்பும்படியாக இருக்கிற திருவடிகளை, வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாதவனாய் இதுவே பிரயோஜனமாக இருக்கிற நான் என்று பெறக்கடவேனை?’ என்கிறார்.

    என்றுகொல் - 2திருக்கையில் ஸ்பரிச சுகத்தை விரும்பி, ‘என்றுகொல் சேர்வது?’ என்ற அளவே அன்றோ மேல்? அதற்கு ஒரு மறுமொழி பெறாதே இருக்க, ‘என்றகொல் சேர்வது?’ என்கிறது என்ன நிலையோதான்! அந்தோ - இனி ‘என்றுகொல் சேர்வது?’ என்பாருங்கூட இன்றியே ஒழியக்காண் புகுகிறது; நான் முடிந்தேன் என்கிறார். 3‘அந்தோ’ என்பதனால், தம்முடைய ஆற்றாமையைத் தெளிவுபடுத்துகிறார். அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின்திருப்பாதத்தை - 4அழிப்பாருடன் ஆக்குவாருடன் வாசி அற உகக்கும்படியான திருவடிகளை. வேறு பிரயோஜனங்களை விரும்புகின்றவர்களுக்கும் கூட விரும்பத் தக்கனவாம்படி இருக்கிற திருவடிகளை வேறு பிரயோஜனங்களை விரும்பாத நான் என்று பெறக்கடவேன்? 5தங்கள் தங்கள் தொழில்களிலேயே நோக்கு

_____________________________________________________________________

1. ‘அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருபாதத்தை யான் என்றுகொல்
  சேர்வது?’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார். வேறு
  விஷயங்களிலே நோக்குள்ளவர்கள்’ என்றது, படைத்தல் முதலான தொழில்களைத்
  திருவுள்ளம் பற்றி. அரிய செயல்களைச் செய்து இந்த அதிகாரங்களைப்
  பெறுகையாலே, ‘புறம்பே தாரகம் முதலானவைகளாம்படி’ என்றதும்
  இப்பதங்களிலே சித்திப்பதாம்.

2. ‘என்று கொல்?’ என்று மீளவும் இத்திருப்பாசுரத்தில் கூறுவது, ஆற்றாமையின்
  மிகுதியாலே என்கிறார், ‘திருக்கையில்’ என்று தொடங்கி. என்றது,
  ஆற்றாமையாலே சொல்லுகையாலே கூறியது கூறல் இல்லை,’ என்றபடி.

3. ‘நான் முடிந்தேன்’ என்பதற்குத் திருப்பாசுரத்தில் சொல் இல்லையே?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார, ‘அந்தோ’ என்று தொடங்கி.

4. பிரமன் முதலாயினார்க்கு வேறு நோக்கும் வேறு பயனும் உண்டு ஆகையாலே,
  இரண்டையும் இரண்டு வாக்கியத்தாலே அருளிச்செய்கிறார், ‘அழிப்பாருடன்’
  என்று தொடங்கி.

5. ‘அழிப்பாருடன்’ என்று தொடங்கிய முதல் வாக்கியத்தை விவரணம் செய்கிறார்,
  ‘தங்கள்’ என்று தொடங்கி. ‘செய்ய நின் திருப்பாதம்’ என்பதற்குப் பொருள்
  அருளிச்செய்கிறார், ‘விரும்பத் தக்கனவாய்’ என்று தொடங்கி.