வ
|
ஆறாந்திருவாய்மொழி -
பா. 3 |
259 |
வனே! படைக்கும் தொழிலையுடைய
பிரமனைச் சரீரமாகவுடையவனே! நீயே விரும்பி வந்து என்னுடைய அரிய உயிரும் நீயே ஆயினாய்; அப்படி
ஆனால், துதிக்க முடியாத கீர்த்தியையுடையவனே! உன்னை எங்கே சேர்ந்து அனுபவிப்பேன்?’ என்கிறார்.
ஈடு : மூன்றாம்
பாட்டு. 1‘பிரமன் சிவன் முதலானவர்களுக்கும் காரணனாய் இருக்கிற நீ, காரணம் இல்லாமலே
வந்து நீயே தாரகனாம்படி செய்தருளினாய்; ஆன பின்னர், நீயே குறையும் செய்தருள வேணும்,’ என்கிறார்.
காத்த எம் கூத்தவோ
- 2மேலே கிருஷ்ணனுடைய சரிதம் வந்ததே அன்றோ, ‘ஆநிரை மேய்த்து அவை காத்த எம்
கூத்தாவோ’ என்று? ‘எத்திறம்’ என்றால், பின்னரும் ‘எத்திறம்’ என்று அதிலே போமித்தனை அன்றோ?
மேலே கூறியது வடிம்பிட்டு, திரியட்டும் ‘காத்த எம் கூத்தாவோ’ என்கிறார். அன்றிக்கே,
‘பசுக்கள், தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு மலையை எடுத்தனவோ?’ என்னுதல். மலை ஏந்திக் கல்மாரி
தன்னை - 3கல்லாலே பெய்தலாலே கல்லை எடுத்துப் பாதுகாத்தான்; நீராலே பெய்தானாகில்
கடலை எடுத்து நோக்குங்காணும். பூத்தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செம் சடையாய் வாய்த்த
என் நான்முகனே!- 4அவர் அவர்களுடைய சொரூபங்களுக்கே உரியனவான இலட்சணம்
சொல்லுகிறது.
_____________________________________________________________________
1. பின் அடிகளைக் கடாட்சித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. மீண்டும் ‘காத்த எம்
கூத்தாவோ!’ என்றதற்கு இரண்டு வகையாகப் பரிகாரம்
அருளிச்செய்கிறார், ‘மேலே’ என்று தொடங்கியும்,
‘பசுக்கள்’ என்று தொடங்கியும்.
‘எத்திறம்’ என்னும் கிருஷ்ணாவதாரச் சரிதமிறே ப்ரஸ்துதமாயிற்று;
ஒருகால்
‘எத்திறம்’ என்றால் பின்னையும் ‘எத்திறம்’ என்னுமா போலே அது
பின்னாட்டுகிறபடி’
என்பது, இருபத்துநாலாயிரப்படி. வடிம்பிட்டு-தூண்டி. திரியட்டும்
-மீண்டும்.
இரண்டாவது பரிகாரத்துக்குக்
கருத்து, ‘தமக்கு ஒரு சாதனத்தைச் செய்வதற்குத்
தகுதி இல்லை என்கைக்காக மீளவும்
சொல்லுகிறார் என்பது.
3. ‘மலை ஏந்திக் கன்மாரிதன்னைக்காத்த’
என்றதற்கு ரசோக்தியாக அருளிச்செய்கிறார்,
‘கல்லாலே’ என்று தொடங்கி.
4. ‘பூத்தண் துழாய்’ என்றும்,
‘புனைகொன்றை’ என்றும், ‘வாய்த்த’ என்றும் கொடுத்த
அடைமொழிகட்குக் கருத்து
அருளிச்செய்கிறார், ‘அவர் அவர்களுடைய’ என்று
தொடங்கி. சொரூபங்களுக்கு -மூர்த்திகளுக்கு.
|