பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

பூத

260

திருவாய்மொழி - ஏழாம் பத்து

பூத்தண் துழாய் முடியாய் - 1தனக்கே சிறப்பானதாய் இறைமைத் தன்மைக்குச் சூசகமான மாலையாயிற்று இது; 2தன்னுடைய சத்தை தன் அதீனமாம்படி இருக்கும் பொருளுக்கு இலக்ஷணமாயிற்று இம்மாலை, 3‘இதனால் இவர் பெற்றதாயிற்றது என் இப்போது?’ என்னில். ‘உன் சத்தை உன் அதீனமாக இருக்க, நான் எங்ஙனே உன்னைப் பெறுகைக்கு ஒரு சாதனத்தைச் செய்து காணும்படி?’ என்கை. புனை கொன்றை அம் செம் சடையாய் - 4பிறர் சத்தையோதான் உன் அதீனம் அன்றிக்கே இருக்கிறது? 5பசுக்களின் சத்தை உன் அதீனமானாற்போன்று ஈஸ்வரர்களாகச் செருக்குற்றிருப்பார்களுடைய சத்தையும் உன் அதீனமாய் அன்றோ இருக்கிறது? 6புனையப்பட்ட கொன்றையையுடையதாய் அழகியதாய்ச் சிவந்திருந்துள்ள சடையையுடைய சிவனும் நீ இட்ட வழக்கு. 

    வாய்த்த என் நான்முகனே - 7மேலே இரண்டு இடங்களிலும் சொன்ன மாலைகள் அவர் அவர்கட்கே உரியவனாய் இருக்குமாறு

____________________________________________________________________

1. ‘‘பூத்தண் துழாய் முடியாய்’ என்றதனால், சர்வேஸ்வரனுடைய அஸாதாரண
  லக்ஷணம் சொல்லுகிறது,’ என்கிறார், ‘தனக்கே’ என்று தொடங்கி.

2. அதனால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார். ‘தன்னுடைய’ என்று தொடங்கி.

3. ‘பூத்தண் துழாய் முடியாய்’ என்கிறவருடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார்,
  ‘இதனால்’ என்று தொடங்கி.

4. ‘பூத்தண் துழாய் முடியாய்’ என்றதற்கு அருளிச்செய்த கருத்தைத் திருவுள்ளத்தே
  கொண்டு ‘புனை கொன்றை அம் செஞ்சடையாய்’ என்றதற்கு இயைபு
  அருளிச்செய்கிறார், ‘பிறர்’ என்று தொடங்கி. ‘சடையாய்’ என்கிற சாமாநாதிகரண்யம்
  சரீர சரீரி பாவ நிபந்தனமாகையாலே. ‘சிவனுடைய இருப்பும் சர்வேஸ்வரனுடைய
  அதீனம்’ என்றபடி.

5. ‘காத்த எம் கூத்தாவோ’ என்றதனைக் கடாட்சித்து, மேல் வாக்கியத்தை விவரணம்
  செய்கிறார், ‘பசுக்களின்’ என்று தொடங்கி. என்றது, ‘பசுக்களின் சத்தை போன்று
  பசுபதியினுடைய சத்தையும் அவன் அதீனம்’ என்றபடி.

6. பதங்கட்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘புனையப்பட்ட’ என்று தொடங்கி.

7. ‘மலைகளை அடைமொழியாக்கி மேலே கூறியவாறு கூறாது, ‘ வாய்த்த’ என்பான்
  என்?’ என்ன. அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘மேலே’ என்று தொடங்கி.
  தனக்கு அடைத்த காரியம்-படைப்பு. வேதங்களிற்கூறியபடியே படைக்க
  வேண்டுமாகையாலும், வேதங்கள் தாம் நான்காக இருக்கையாலும், நான்கு
  வேதங்களையும் உச்சரிக்க நான்கு முகங்கள் வேண்டுகையாலும், தனக்கு
  அடைத்த காரியத்துக்கு நான்கு முகங்கள் அசாதாரணமாக இருக்க வேண்டும்
  என்றபடி.