New Page 1
|
ஆறாந்திருவாய்மொழி -
பா. 3 |
261 |
போலே ஆயிற்று, இவனுக்கும்
தனக்கு அடைத்த காரியத்துக்கு நான்கு முகங்கள் சிறப்பாக இருக்கிறபடி. 1இன்னமும்,
ஈஸ்வரன் தனக்கும் ‘இப்படி படைப்போம்’ என்றாலும் முடியாதபடியாயிற்று பிரமனுடைய படைப்பில் உண்டான
வாய்ப்பு. ‘என்’ என்னும் சொல், 2விசேடியத்திலே ஊற்றமாகக்கடவது. 3வையதிகரண்யத்தாலே
சொன்னால் கழற்றிக்கொள்ளுகைக்கும் உடலாய், கேவலம் பேதத்தையே சொல்லுகிறது என்று மயங்குவதற்கும்
உடலாய் இருக்கும்; சாமாநாதிகரண்யத்தாலே சொன்னால் சேஷ சேஷி பாவமாகிற பிரிவும் தோற்றி
இருக்கும்.
4ஆக,
சாமாநாதிகரண்யம் வையதிகரண்யம் என்னும் இரண்டற்கும் பலம் எல்லாவற்றையும் நியமித்தலே அன்றோ?
ஆனாலும், சாமாநாதிகரண்யத்தாலே சொல்லுமதற்கு இத்தனை வாசி உண்டு. 5ஸ்வம் உத்திஸய-தன்னை
நோக்கியே அன்றோ இவற்றைத் தாங்கிக்
____________________________________________________________________
1. ‘வாய்த்த’ என்பதற்குப்
பொருள் அருளிச்செய்கிறார், ‘இன்னமும்’ என்று
தொடங்கி. வாய்த்த-ஆற்றல் பொருந்திய.
2. ‘விசேடியத்திலே ஊற்றமாகக்
கடவது’ என்றது, ‘நான்முகனைச் சரீரமாகவுடைய
சரீரியான சர்வேஸ்வரனிடத்திலே சேரக்கடவது’ என்றபடி.
3. ‘வையதிகரண்யமாகப்
பொருஉள் சொல்லாமல், சாமாநாதிகரண்யமாகப் பொருள்
அருளிச்செய்வான் என்?’ என்னில், அதற்கு
விடை அருளிச்செய்கிறார்,
‘வையதிகரண்யத்தாலே’ என்று தொடங்கி. கழற்றிக்கொள்ளுகைக்கு-உறவு
அறுத்துக்கொள்ளுகைக்கு ‘சேஷ சேஷி பாவமாகிற பிரிவும் தோன்றியிருக்கும்’
என்றது, ‘சரீர சரீரிகளுக்குப்
பேதம் உண்டாகையாலே, சேஷ சேஷி பாவமாகிற
பிரிவும் தோன்றி இருக்கும்,’ என்றபடி. ‘பிரிவும்’
என்ற உம்மையாலே ‘அப்ருதக்
விசேஷணத்துவமும் தோற்ற இருக்கும்’ என்றபடி. அப்ருதக் விசேஷணத்துவம்
-பிரிக்க
முடியாத விசேடணமான தன்மை.
4. இரண்டாலும் சித்தித்தது
நிர்வாகத்துவமேயாகிலும், சாமாநாதி கரண்யத்தாலே
சொல்லுமதற்கு அப்ருதக்ஸித்தியாகிற உயர்வு
உண்டு என்று
சாமாநாதிகரண்யத்துக்குப் பிரயோஜனம் அருளிச்செய்கிறார், ‘ஆக’ என்று தொடங்கி.
‘இத்தனை வாசி’ என்பது. மேலே அருளிச்செய்தனவற்றைத் திருவுள்ளம் பற்றி.
5.
‘அப்ருதக்ஹித்த விசேஷணங்களாய் நியமிக்கப்படுகின்றவர்களாய் இருப்பார்களோ?’
என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘ஸ்வம் உத்திஸ்ய’ என்று தொடங்கி.
‘தன்னை நோக்கியே’ என்றது
‘தனக்குச் சேஷமாக’ என்றபடி.
|