New Page 1
|
262 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
கொண்டிருக்கிறான்?
1 ‘திருவரங்கநாதனே! திருமால் தன்னை நோக்கியே சேதனகள் அசேதனங்கள் ஆகிய இவற்றினுடைய
சொரூபம் இரட்சணம் நியமணம் முதலானவற்றை ஏற்றங்கொள்ளுகிறான் என்று உபநிடதம் சொல்லுகிறது’
என்கிறபடியே, 2சத்தையே பிடித்து, அளித்தல் நியமித்தல் முதலியவைகள் அகப்பட
அவன் அதீனமாயிருக்கையாலே, பிரிய நின்று ஒரு சாதனத்தைச் செய்வதற்கு ஒரு தகுதி இல்லையாம்படி
ஆயிற்றுப் பாரதந்திரியத்தின் எல்லை இருக்கும்படி.
வந்து என் ஆர் உயிர்
நீ - 3பிறர் பக்கல் செய்த உபகாரத்தைச் சொல்ல வேணுமோ? என் பக்கல் செய்த
உபகாரந்தனோ அமையாதோ? 4‘நீ ஒருவன் உளை’ என்று கனாக் கண்டும் அறியாதே
புறம்பே பற்று உள்ளவனாய் இருக்கிற என்னை, அதனைத் தவிர்த்து உன்படியை அறிவித்து உன்னை ஒழியத்
தரியாதபடியான நிலையைப் பிறப்பித்தாய். ஆனால் - இப்படி இருந்த பின்பு. ஏத்த அருங்கீர்த்தியினாய்
- 5நீ சத்தையை உண்டாக்க உன்னாலே சத்தையைப் பெற்று இருக்கிற நான் ‘ஏத்துவேன்’
என்றால், என்னாலேதான் ஏத்தலாம்படி இருந்ததோ?’ ஆனால் - உன்படி அது; என்படி இது;
______________________________________________________________________
1. இதனால், சத்தை ஸ்திதி
நியமனம் முதலானவைகள் அவன் அதீனம் என்று
தோற்றமையாலே, மேலே கூறிய பதங்களையும் எடுத்து விவரணம்
செய்கிறார்,
‘திருவரங்கநாதனே!’ என்று தொடங்கி.
‘உபாதத்தே ஸத்தா
ஸ்திதி நியமநஆத்யை; சித்அசிதௌ
ஸ்வம் உத்திஸ்ய
ஸ்ரீமாந் இதிவததி வாக் ஒளபநிஷதீ’
என்பது, ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2
: 87.
2. இச்சுலோகம் முன்னாக, இத்திருப்பாசுரத்திற்சொல்லுகிற
சாமாநதிகரண்யத்துக்கு
இடத்துக்குத் தகுதியாகப் பிரயோஜனம் அருளிச்செய்கிறார், ‘சத்தையே’
என்று
தொடங்கி.
3. ‘வாய்த்த என் நான்முகனே’
என்றதன் பின், வந்து என் ஆர் உயிர் நீ’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘பிறர் பக்கல்’
என்று தொடங்கி.
4. ‘அந்த உபகாரம் யாது?’
என்ன, ‘நீ ஒருவன்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
5. ‘என் ஆருயிர் நீ ஆனால்’
என்றதன் பின் ‘ஏத்தருங்கீர்த்தியினாய்’ என்கையாலே,
‘என்னால் ஏத்தி முடிக்கப் போகாத
கீர்த்தியையுடையன்’ என்று கூறத் திருவுள்ளம்
பற்றி அதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்,
‘நீ சத்தையை’ என்று தொடங்கி.
6.
‘ஏத்தருங்கீர்த்தியினாய் வந்து என் ஆர் உயிர் நீ ஆனால்’ என்று கூட்டிப்
பொருள் அருளிச்செய்கிறார்,
‘ஆனால் உன் படி’ என்று தொடங்கி.
|