பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 2

26

திருவாய்மொழி - ஏழாம் பத்து

செய்கின்ற ஐந்து இந்திரியங்களையும் எதிரும் பக்கங்களுமாக அடைத்து நிறுத்தி நெகிழ விடுகின்றவரைப் போலே இராநின்றாய்; இரட்சகனான நீ பாராமுகம் செய்தால் இனி உபகாரர் ஆவார் யாவர்?

    வி-கு
: ‘இன்றி அடும் செக்கு’ என்க. இன்றி - இல்லாதபடி. ‘இட்டுத் திரிக்கும் ஐவரை அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்’ என்க. நெகிழ்ப்பான் ஒக்கின்றாய் - ‘கைவிடுமாறு போலே இருக்கின்றாய்’ என்னுதலுமாம்.

    ஈடு :
ஐந்தாம் பாட்டு. 1‘மாற்றுச் செய்கை இல்லாதபடி விஷயங்களாலும் இந்திரியங்களாலும் நலிந்து என்னை நீ கைவிட்டால் வேறு இரட்சகர் உளரோ?’ என்கிறார்.

   
தீர் மருந்து இன்றி-2வேறு பரகாரம் உண்டாகிலும் ஆற்றலாம் அன்றோ? 3சர்வசக்தியாலும் போக்கப் போகாதன்றோ? ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு-ஐம்புலன்களாகிற நோயாலே இவ்வாத்துமாவை 4முடிக்கும் சரீரமாகிற செக்கிலே இட்டு. திரிக்கும் ஐவரை-வருத்துகின்ற ஐம்பொறிகளை. என்றது, ‘சரீரத்திலே புகுவித்து ஓசை முதலிய புலன்களைக் காட்டி நெருக்குகிற செவி முதலிய பொறிகளை’ என்றபடி. நேர்மருங்கு உடைத்தா அடைத்து-எதிரும் பக்கங்களுமாக அடைத்து. என்றது, 5‘அபிமந்யு என்ற ஓர் இளைஞனை நலிகைக்கு அதிரதர் மஹாரதர் என்னுமவர்கள் அடங்கலும் சூழப் போந்து அடைத்தாற்போலே, இந்திரியங்களுக்குக்

 

1. ‘ஆர் மருந்து இனி ஆகுவார்?’ என்னுமளவும் கடாட்சித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. ‘தீர் மருந்து இன்றியே’ என்கிறவருடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார்,
  ‘வேறு ஒரு’ என்று தொடங்கி.

3. இன்னாராலே என்று விசேடியாமல் பொதுவிலே ‘தீர் மருந்தின்றி’ என்பதற்கு பாவம்
  அருளிச்செய்கிறார், ‘சக்கரவர்த்தியாலும்’ என்று தொடங்கி. சர்வசக்தி-சர்வேஸ்வரன்.

4. முடிக்கும்-முடிகைக்காக. இட்டு-புகுவித்து. ‘ஐந்து நோவைக் கொண்டு இவ்வாத்துமாவை
  முடிக்கைக்காகச் செக்கிலே இட்டுத் திரிக்கும் ஐவரையும் நேர்மருங்குடைத்தா
  அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்’ என்று கூட்டுக.

5. அடைத்தலாவது, நிறுத்துதல். அதனைத் திருஷ்டாந்த மூலமாகக் காட்டுகிறார்,
  ‘அபிமந்யு’ என்று தொடங்கி, அதனை, வில்லிபாரதம் பதின்மூன்றாம்
  போர்ச்சருக்கத்தில், 91 முதல் 136 முடியவுள்ள செய்யுள்களில் காணல் தரும்.
  கையடைப்பாக்கி-வசமாக்கி.