ப
|
ஆறாந்திருவாய்மொழி -
பா. 7 |
271 |
பாரதந்திரியும் உண்டாய்
இருந்தது; 1அத்தலையாலே பெறுமிடத்தில் ஒரு கண்ணழிவு இன்றிக்கே இருந்தது; 2இப்படி
இருக்கச்செய்தேயும் இழந்து இருக்கக் காண்கையாலே ‘நான் இழவோடே கிடந்து முடிந்து போமித்தனையேயன்றோ?’
என்கிறார்.
என் திரு மார்பன்தன்னை
- இவ்விடத்திலே ‘என்’ என்கிற சொல், விசேடண அமிசத்திற்கு அடைமொழி; 3‘என்
திருமகள் சேர் மார்பன்’ என்ற இடத்திலே கொண்டது போன்று கொள்க. என் சுவாமினியான பெரிய
பிராட்டியாரைத் திருமார்விலேயுடையவனை. 4‘என் மலைமகள் கூறன்’ என்பது முதலான இடங்களில்
உள்ள ‘என்’ என்பது, விசேடிய அமிசத்திலே ஊற்றம். ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
5‘அவனுடைய விபூதி யோகத்துக்கு உறுப்பாகச் சொல்லுகிறார் இத்தனை அன்றி,
‘மறந்தும் புறம்தொழா மாந்தர்’ ஆக இருக்குமவர் ஆதலின், இவர்களோடே தமக்கு ஒரு சம்பந்தம்
உண்டு என்கிறார் அல்லரே?’ என்றபடி, என் மலைமகள் கூறன் தன்னை -இமயமலையின் பெண்பிள்ளையைத்
தன்னுடம்பிலே ஒரு பக்கத்திலேயுடையனாய் இருக்கிற சிவனைத் தான் இட்ட வழக்காகவுடையனாய்
இருக்கிறவனை.
____________________________________________________________________
தகுதியில்லாதபடியான பாரதந்திரயம்
தோன்றுகிறது’ என்று திருவுள்ளம் பற்றி,
‘இத்தலையாலே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
1. ‘என் திரு மார்பன்தன்னை’
என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘அத்தலையாலே’
என்று தொடங்கி அருளிச்செய்கிறார், கண்ணழிவு-கால
தாமதம்.
2. ‘காணேனோ’ என்றதனைக்
கடாட்சித்து அருளிச்செய்கிறார், ‘இப்படி இருக்கச்
செய்தேயும்’ என்று தொடங்கி.
3. பக். 91. காண்க.
4. ‘என் திருமார்பன்’ என்ற
இடத்தில் ‘என்’ என்பதனைத் திருவுக்கு அடைமொழி
ஆக்கினது போன்று, ‘என் மலைமகன் கூறன்தன்னை’
என்பது போன்ற
இடங்களில் ‘என்’ என்பதனை ‘மலைமகள்’ முதலாயினார்க்கு அடைமொழி
ஆக்கலாகாது
என்கிறார், ‘என் மலைமகள்’ என்று தொடங்கி. ‘விசேடிய
அமிசத்திலே’ என்றது, பரம ‘விசேஷ்யனான
சர்வேஸ்வரனிடத்தில்’ என்றபடி.
5. ‘விசேஷண
அமிசத்திலே ஊற்றமானால் என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அவனுடைய’ என்று தொடங்கி.
‘மறந்தும்’ என்பது,
நான்முகன் திருவந். 68.
|