என
|
272 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
என்றும் என் நாமகளை
அகம்பால் கொண்ட நான்முகனை - சரஸ்வதியை என்றுமொக்கத் தன் பக்கலிலேயுடையனாய் இருக்கிற
பிரமனுக்கு அந்தராத்துமாவாயுள்ளவனை. நின்ற சசிபதியை - இவர்களை எண்ணினால் தன்னை எண்ணலாம்படி
ஐஸ்வரியத்தால் குறைவற்றிருக்கிற இந்திரனுக்கு அந்தராத்துமாவாய் உள்ளவனை. 1‘அவன்
பிரமன், அவன் சிவன்’ என்றால், ‘அவன் இந்திரன் என்று ஒக்கச் சொல்லலாம்படி முட்டுப்பொறுத்துநின்ற
இந்திரனுக்கு அந்தர்யாமியாயுள்ளவனை. 2‘இப்போது இவை சொல்லுகிறதற்குக் கருத்து
என்?’ என்னில், ‘சொரூபமும் உயர்வும் அவன் அதீனம்’ என்றார்; இங்கே, ‘தக்க வயதினை அடைந்த
புத்திரர்களுக்கு ஒத்த இடங்களிலே திருமணம் செய்விக்கும் தமப்பன்மார்களைப் போலே, இவர்கள்
தாம் மனைவிகள் அடைந்ததும் தந்தாமால் அன்று; சர்வேஸ்வரனாலேயாம்’ என்பதனைத் தெரிவித்தபடி.
‘இவர்களுடைய செயல்கள்
எல்லாம் அவனுடைய அதீனம்’ என்கிறது மேல்: நிலம் கீண்டு. . .விசும்பாளியை - 3‘பிரளய
சமுத்திரத்திலே மூழ்கினதாய் அண்டப்பித்தியிலே புக்கு ஒட்டி பூமியை மஹா வராஹமாய்ப் புக்கு
எடுத்துக்கொண்டு ஏறின போதைய செயல் தன்னுடைய அதீனம் ஆனாற்போலே, அவர்களுடைய செயல்களும்
அவனுடைய அதீனம்’ என்கிறது. எயில் மூன்று எரித்த - மதிள் மூன்றை எரித்த. 4‘விஷ்ணு
அந்தராத்துமாவாய் நின்றான்’ என்னக்கடவது அன்றோ? அதுவும் அவன் இட்ட வழக்கு.
வென்று
_____________________________________________________________________
1. சிவன் முதலானவர்களோடு
இந்திரனையும் சேர்த்து எண்ணுவதற்குப் பிரமாணம்
காட்டுகிறார், ‘அவன் பிரமன்’ என்று தொடங்கி.
‘ஸப்ரஹ்மா ஸஸிவ:
ஸேந்த்ர;’ என்பது, தைத். நாரா.
2. சிவன் முதலாயினோரை,
தத்தம் மனைவிமார்களோடே சேர்த்துச் சொல்லுவதற்குக்
கருத்தை அருளிச்செய்கிறார்,
‘இப்போது’ என்று தொடங்கி. இவை சொல்லுகிறதற்கு
-மனைவிமார்களோடே இவர்களைச் சேர்த்துச்
சொல்லுவதற்கு.
3. ‘நன்று; ‘நிலங்கீண்டு’
என்று அவன் தன் செயலைச் சொல்லுவான் என்?’ என்ன.
திருஷ்டாந்தத்தின்பொருட்டு’ என்கிறார்,
‘பிரளய சமுத்திரத்திலே’ என்று தொடங்கி.
4. ‘மதிள் மூன்று எரித்தது
சர்வேஸ்வரனோ?’ என்ன, ‘ஆம்’ என்று அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘விஷ்ணு’ என்று தொடங்கி.
‘விஷ்ணு: ஆத்மா
பகவத: பவஸ்ய அமிததேஜஸ;
தஸ்மாத் தநுர்ஜ்யா
ஸமஸ்பர்ஸம் சவிஷேஹே மஹேஸ்வர;’
என்பது, பாரதம், கர்ணபர்வம்.
|