பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

அவன

278

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    அவன் தம்பிக்கே விரிநீர் இலங்கை அருளி - 1‘இராவணன் தானேயாகிலும்’ என்கிறபடியே, ‘சரணம்’ என்ற சொல் அழகியதாய் இருந்தது, ‘அவனோடு சம்பந்தமுடையான் ஒருவன் வந்தானாகை அன்றிக்கே, அவன்தானே வரப்பெறுவதுகாண்’ என்று செவி சீப்பாய்ந்து இருந்தார் அன்றோ? 2‘அங்குநின்றும் வந்தான் ஒருவனைக் கைக்கொண்டாராக அமையாதோ? இந்நிர்பந்தம் என்?’ என்னில், அவனோடு சம்பந்தமுடையான் ஒருவனைக் கைக்கொண்டால், அவன் தானும் நான்கு பேருமாகப்போம்; அவன்தானே வரப்பெற்றதாகில் துருப்புக்கூடாக நோக்கிற்று ஆகலாம் அன்றோ? 3மேலும், பகைமையில் முதிர நின்றானும் அவனே ஆகையாலே, ‘காப்பாற்றுமவனாக வேண்டும்’ என்ற விருப்பம் உள்ளதும் அவனிடத்திலே அன்றோ? 4இப்படி அவனை அங்கீகரிப்பதற்குக் கோலிப் பெறாத இழவு தீர்ந்தது இவனைக் கைக்கொண்ட பின்பாயிற்று. 5‘நான் இராவணனுக்குப் பின்

___________________________________________________________________

1. ‘‘அவன் தம்பிக்கு’ என்கைக்கு, அவன் சம்பந்தம் அங்கீகாரத்துக்குக் காரணமோ?’
  என்ன, ‘இராவணன்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

        ‘விபீஷணோ வா ஸூக்ரீவ யதிவா ராவண: ஸ்வயம்’

என்பது, ஸ்ரீராமா. யுத். 18 : 34. இச்சுலோகத்துக்குப் பொருள் அருளிச்செய்கிறார்,
‘சரணம்’ என்று தொடங்கி. செவி சீப்பாய்ந்து-விரும்பி.

        ‘எந்தையே! இராகவ! சரணம் என்ற சொல்
         தந்தவர் எனைவரோ சாற்று மின்என’

(கம்பராமா. விபீட. 36.)

 என்ற செய்யுட்பகுதியில் இவ்வியாக்கியானக் கருத்துத் தோற்றுதல் காண்க.

2. ‘இராவணன் தானே வரவேண்டும்’ என்று ஆசைப்பட்டிருந்த பெருமாளுடைய்
  கருத்தை வினை விடை ரூபமாக அருளிச்செய்கிறார், ‘அங்கு நின்றும்’ என்று
  தொடங்கி. என்றது, ‘எல்லாரையும் காப்பாற்றலாம்’ என்றபடி. துருப்புக் கூடு
  -தூற்றாப்பொலி.

3. ‘இராவணனையே கைக்கொள்ள வேண்டும் என்றதற்கும் வேறும் ஒரு காரணத்தை
  அருளிச்செய்கிறார், ‘மேலும்’ என்று தொடங்கி.

4. ‘ஆனால், அவன் வந்தான் இல்லையே?’ என்ன, ‘இப்படி’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

5. ‘அப்படி அவன் சம்பந்தம் அடியாகக் கைக்கொண்டாரோ?’ என்ன, ‘நான்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். என்றது, ‘அவன் தன்னுடைய
  தோஷத்தை முன்னிட்டுக்கொண்டு வர, அதுவே பற்றாசாக அங்கீகரித்தார்’ என்றபடி.

        ‘அநுஜ; ரநவணஸ்ய அஹம் தேநச அஸ்மி அவமாநித:
         பவந்தம் ஸர்வபூதாநாம் ஸரண்யம் ஸரணம் கத:’

என்பது, ஸ்ரீராமா யுத் 19 : 4.