அ
ஏழாந்திருவாய்மொழி - முன்னுரை |
287 |
அது கைவாராமையாலே நோவுபட;
இவள் நிலையைக் கண்ட தோழிமாரும் தாய்மாரும், ‘உனக்கு ஓடுகிறது என்?ய என்று கேட்க, 1ஆற்றாமை
பிரசித்தமாயினபடியால் சிலர்க்குச் சொல்லிச் சிலர்க்கு மறைக்கும்படியான நிலை இல்லையே!
ஆகையாலே, அவர்களைக் குறித்து, ‘அவனுடைய திருமுகத்தில் அழகானது தனித்தனியும் 2திரளவும்
வந்து நலியாநின்றது’ என்ன, ‘நீ இங்ஙனே சொல்லுமது 3உன்னுடைய பெண்மைக்குப்
போராது; அவனுடைய தலைமைக்கும் போராது; 4நீதான் எங்களை நோக்கக் கடவதாய்
இருப்பது ஒரு தன்மை உண்டே அதுக்கும் போராது; ஆன பின்பு, இதனைத் தவிர்,’ என்று ஹிதம்
சொல்லுவாரும் பொடிவாருமாக; ‘நீங்கள் பொடிகிற இதனைக் கேட்டு மீளும் அளவு அன்று அது என்னை நலிகிறபடி;
5இனித்தான் ஏதேனுமாக உறைத்ததிலே ஊன்றி நிற்குமத்தனை அன்றோ? 6ஆன
பின்பு, நீங்கள் என்னை விட்டுப் பிடிக்க அமையும்,’ என்று அவர்களுக்குத் தன் பக்கல் நசை அற
வேண்டும்படி தனக்குப் பிறந்த ஆற்றாமையை அறிவிக்கறாளாய் இருக்கிறது.
7‘இவர்க்குத்
திருவாய்மொழி எங்கும் ஓடுகிற தன்மைகள் சர்வேஸ்வரனுடைய குணங்களை ஆசைப்படுகையும், அதுதான்
____________________________________________________________________
1. ‘தோழிமார்க்கு ஒழிய,
தாய்மார்க்குத் தன் நிலையைக் கூறலாமோ?’ என்ன,
‘ஆற்றாமை’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
2. ‘திரளவும்’ என்றது, திருவாய்மொழியில்
வருகின்ற ‘கோளிழைத் தாமரையும்’ என்ற
திருப்பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி.
3. ‘நிற்றி முற்றத்துள்’
என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘உன்னுடைய பெண்மைக்குப்
போராது’ என்கிறார்.
4. ‘நீதான் எங்களை நோக்கக்
கடவதாய் இருப்பது ஒரு தன்மை’ என்றது, ‘எங்கள்
வார்த்தைகளைக் கேட்டு எங்களுக்கு அடங்கியவளாய்
இருப்பது ஒரு தன்மை’
என்றபடி.
5. ‘நாங்களும் நலிகின்றோமே?
எங்கள் வழியே ஒழுக ஒண்ணாதோ?’ என்ன,
‘இனித்தான்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். உறைத்ததிலே
-பிரபலமானதிலே.
6. ‘நங்கைமீர் நசை என்
நுங்கட்கே?’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘ஆன பின்பு’
என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
7. இதற்குச்
சுவாபதேசப்பொருள் அருளிச்செய்கிறார், ‘இவர்க்கு’ என்று தொடங்கி.
|