பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஏழ

ஏழாந்திருவாய்மொழி-‘ஏழையர்’

முன்னுரை

    ஈடு : 1மேல் திருவாய்மொழியிலே ‘மல்கு நீலச் சுடர் தழைப்பச் செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல், அந்தரமேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய், செஞ்சுடர்ச்சோதி விட உறை என் திருமார்பனையே’ என்று அவன் வடிவழகினைச் சொன்னார்; அவ்வடிவழகுதானே நெஞ்சிலே ஊற்றிருக்க, அதனையே பாவித்த காரணத்தாலே, அந்த பாவனையின் மிகுதியாலே கண் கூடாகக் காண்பதே போன்றதாய், பின்பு கண் கூடாகப் பார்ப்பதாகவே நினைத்து அணைக்கக் கணிசித்துக் கையை நீட்டி. அப்போதே பெறாமையாலே தமக்கப் பிறந்த ஆற்றாமையை, எம்பெருமானோடேகலந்து பிரிந்து உருவு வெளிப்பாட்டாலே நோவுபடுகிறாள். ஒரு பிராட்டி பாசுரத்தாலே அருளிச்செய்கிறார்.

    3
சர்வேஸ்வரனோடே கலந்த பிரிந்து தளர்ந்து உருவு வெளிப்பாட்டாலே நோவுபடுகிறாள் ஒரு பிராட்டி. 3ஒருவர் ஒருவரோடு கலக்கும் போது 4காட்சி முன்னாகப் பின்பே அன்றோ மற்றைப் பரிமாற்றங்களை ஆசைப்படுவது? ஆகையாலே, திருக்கண்களின் அழகைக் கூறி, அவ்வழியாலே திருமுகத்தில் அழகைக் கூறி பின்பு அவ்வருகே சில பரிமாற்றலகளை ஆசைப்பட்டு அப்போதே

____________________________________________________________________

1. மேல் திருவாய்மொழிக்கும் இதற்குமுள்ள இயைபினைச் சுருக்கமாக
  அருளிச்செய்கிறார், ‘மேல் திருவாய்மொழியிலே’ என்று தொடங்கி. ஊற்றிருக்க
  -ஊறிக்கொண்டு இருக்க; ‘மாறாதே தங்கியிருக்க’ என்றபடி.

2. மேலே சுருங்க அருளிச்செய்த அந்த இயைபினை விரித்து அருளிச்செய்கிறார்,
  ‘சர்வேஸ்வரன்’ என்று தொடங்கி.

3. ‘முன்னே திருக்கண்களின் அழகைச் சொல்லுவான் என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘ஒருவர்’ என்று தொடங்கி.

4. அகப்பொருள் பற்றிய கோவைகளில், முதல் முன்னம் ‘காட்சி’ என்னும் துறையே
  அமைந்திருத்தல் காண்க. ‘பரிமாற்றங்கள்’ என்றது, மெய்தொட்டுப் பயிறல்
  முதலாயினவற்றை. ‘ஒரு பிராட்டி, திருக்கண்களின் அழகைக்கூறி, திருமுகத்தில்
  அழகைக்கூறி, ஆசைப்பட்டு, கை வாராமையாலே நோவுபட’ எனக் கூட்டுக.