பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஏழாந்திருவாய்மொழி - பா. 1

289

திருகண்கள் நான்கு புறங்களிலும் அன்று மலர்ந்த மலர்கள் போன்று வந்து தோன்றாநின்றன; வருத்தத்தையுடைய யான் என்ன செய்வேன்? 

    வி - கு :
கூற்றம் - உயிரையும் உடலையும் கூறுபடுபடுத்துமவன்; யமன். கண்டீர் - முன்னிலையசை.

    இத்திருவாய்மொழி கலிநிலைத்துறை.

    ஈடு :
முதற்பாட்டு. 1‘இம்முகத்துக்குக் கண்ணாக இருப்பவர் நாம் அன்றோ?’ என்று முற்படத் திருக்கண்களின் அழகு வந்து தம்மை நலிகிறபடியை அருளிச்செய்கிறார்.

    ஏழையர் ஆவி உண்ணும் இணைக்கூற்றங்கொலோ அறியேன்- 2ஒவ்வொரு விஷயத்திலே விருப்பத்தைச் செய்து, அவை பெறாவிடில் தரிக்கமாட்டாத பலம் இல்லாத பெண்களுடைய பிராணன்களை முடிக்கிற கூற்றுகள் இரண்டோ? 3பிரிந்து ஆற்றாமையை விளைத்தவனுக்கும் அன்றிக்கே, ‘இது ஆகாது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கும் பருவம் கழிந்த தாய்மார்க்கும் அன்றிக்கே, அபலைகளையே முடிப்பன இரண்டு கூற்றமோ! 4தன் கண் அழகு தான் அறிகின்றிலனே! தன்னையும் நலிந்ததாகில் வாரானோ? 5கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியானோ? இராமபாணம்போலே, ஒப்பனை குறி அழியாதே இருக்க உயிரை முடியாநின்றது ஆதலின், ‘ஆவி

______________________________________________________________________

1. ‘திருக்கண்கள்கொலோ அறியேன்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி ரசோக்தியாகக்
  கருத்து அருளிச்செய்கிறார், ‘இம்முகத்துக்கு’ என்று தொடங்கி. இம்முகத்துக்கு-இந்த
  முகத்துக்கு என்பதும், இந்த இடத்துக்கு என்பதும் பொருளாம். ‘கண்ணாய்
  இருப்பவர்’ என்பதற்கு பிரதானமாய் இருப்பவர் என்பதும் ஒரு பொருள்.

2. பெண்கள் என்னாமல், ‘ஏழையர்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘ஒவ்வொரு விஷயத்திலே’ என்று தொடங்கி.

3. ‘ஏழையர்’ என்றதனால், மற்றையோரினின்றும் வேறுபடுத்திக் காட்டுகிறார், ‘பிரிந்து’
  என்று தொடங்கி. அபலைகள்-பலம் இல்லாதவர்கள், சிறு பெண்கள்.

4. ‘அவனுக்கு வருத்தம் இல்லை என்பதனைத் தான் அறிந்தவாறு யாங்ஙனம்?’
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘தன் கண் அழகு’ என்று தொடங்கி.

5. ‘தன் கண்ணழகு தான் அறிவதற்குக் காரணம் உண்டோ?’ என்ன, ‘கண்ணாடி’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்