பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

உண

290

திருவாய்மொழி - ஏழாம் பத்து

உண்ணும்’  என்கிறது. 1கூற்றுவர் இருவர் தங்களிலே கிருத சங்கேதராய் வந்தாற்போலேகாணும் திருக்கண்களில் அழகு பாதகமாகின்றன என்பாள், ‘இணைக் கூற்றங்கொலோ’ என்கிறாள். ‘‘அறியேன்’ என்பான் என்? ‘கூற்றம்’ என்று அறுதியிட்டாலோ?’ என்னில், கூற்றுவர் இருவர் கிருத சங்கேதராய் வந்தாலும் அபலைகளையே நலியவேண்டும் நிர்ப்பந்தமில்லையே! ‘ஆடவர்களுடைய கண்ணையும் மனத்தினையும் கவர்கின்றவர்’ அன்றோ? அதனாலே ‘அறியேன்’ என்று சொல்லுகிறது.

    ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ அறியேன் - 2அன்றிக்கே, பெண் பிறந்தாரையே நலிக்கூடியவைகள் தாமேயோ? 3அற்பம் அண்ணியாரே பாதகராம் அன்று தப்ப விரகு இல்லை; இப்படி முதலுறவு பண்ணிப் பொருந்தவிட்ட இத்திருக்கண்கள் தாமேயோ? 4உபகாரம் செய்தலையே சுபாவமாகவுடைய கிருஷ்ணனுடைய கடல் போலே திருக்கண்கள் என்னுதல்; அன்றிக்கே, ‘கடல் போன்ற சிரமஹரமான வடிவையுடைய உபகாரசீலனான கிருஷ்ணனுடைய திருக்கண்கள்’ என்னுதல். அறியேன் - 5இதற்கு முன்பு பிரிந்து அறியாமையாலே திருக்கண்கள் பாதகமாம் என்று

_____________________________________________________________________

1. உயிர்களுக்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணை
  ‘இணைக்கூற்றம்’ என்பான் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘கூற்றுவர் இருவர்’ என்று தொடங்கி. கிருதசங்கேதர்-கிருதம்-செய்யப்பட்ட;
  சங்கேதம்-குறி; ஒற்றுமை உணர்ச்சியையுடையவர்கள்.

2. ‘கண்ணபிரான் திருக்கண்கள்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’
  என்று தொடங்கி.

3. ‘இப்படி நலிகிற இடத்தில் ‘பிரான்’ என்பான் என்?’ என்ன, ‘அற்பம்
  அண்ணியாரே’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். என்றது,
  ‘பிரதிகூலன் வருத்தத் தொடங்கினால் உபாயத்தாலே தப்பலாம்; அநுகூலன்
  வருத்தத்தொடங்கினால் தப்பப் போகாது,’ என்றபடி. இதனால்,
  ‘உபகாரகனைப்போலே இருந்து வருத்துகிறவனாகிறான்’ என்றபடி. புணர்ச்சி
  நிகழ்ந்தவுடனே பிரிந்து போகையினாலே ‘அற்பம் அண்ணியார்’ என்கிறது.

4. சொற்களுக்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘உபகாரம் செய்தலையே’ என்று
  தொடங்கி.

5. ‘திருக்கண்கள் என்று அறுதியிட்டு உரையாமல், ‘அறியேன்’ என்பான் என்?’
  என்ன. ‘இதற்கு முன்பு’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.