வ
|
ஏழாந்திருவாய்மொழி -
பா. 3 |
297 |
வி - கு :
‘அம்மான் தொண்டைவாய் கனிகொல்? வினைகொல்? கொழுந்துண்டங்கொலோ? அறியேன்; திசையுள்
எல்லாம் வந்து தோன்றும்’ என்க.
ஈடு : மூன்றாம்
பாட்டு. 1அது தன் மூக்கு வலி காட்ட நாம் பேசாதே இருந்தால், ‘அத்தனையோ இதன்
வாய் வலி’ என்று நம்மை ஏசுவர்கள் என்று திருப்பவளத்தின் அழகு வந்து நலிகிறபடியை அருளிச்செய்கிறார்.
வாலியது ஓர் கனிகொல்
- 2முன்பு பிஞ்சாய், பின்பு பக்குவமாய், பின்பு அனுபவயோக்கியம் அன்றிக்கே போவன
சில பழங்கள் உளவே அன்றோ? அங்ஙன் அன்றிக்கே, என்றும் ஒக்க ஒரே தன்மையாய் இருப்பது
ஒருகனியோ? 3அத்தலையில் இனிமை போது செய்யாமையாலே இத்தலையில் ஆற்றாமையும்
போது செய்யாதே! வினையாட்டியேன் வல்வினைகொல் - 4இனிய பொருள் தீயது ஆயிற்று.
அனுபவிக்கின்ற வர்கள் செய்த பாபத்தாலே அன்றோ? அமிருதமே விஷமாம்படியான பாவத்தைச் செய்தேன்.
5பாவத்தைச்
____________________________________________________________________
1. ‘தொண்டைவாய்’ என்றதனைத்
திருவுள்ளம் பற்றி ரசோக்தியாக அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. ‘வாலியதோர் கனி’ என்பதற்கு,
ஒரே தன்மையதாய் இருக்கும் கனி’ என்பது
பொருள். அதனை எதிர்த்தட்டாக விவரணம் செய்கிறார்
‘முன்பு’ என்று
தொடங்கி. வாலியது-வலியது. வன்மையாவது, நிலைத்திருக்கும் தன்மையது,
என்றது,
‘ஒரே தன்மையானது’ என்றபடி. சில பழங்கள்-எட்டிப்பழம் முதலானவை.
3. மனோபாவத்தை அருளிச்செய்கிறார்,
‘அத்தலையில்’ என்று தொடங்கி. போது
செய்கை-குவிதல்.
4. ‘வல்வினை’ என்கைக்குக்
காரணம் யாது?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இனிய பொருள்’ என்று தொடங்கி.
அதனை விவரணம்
செய்கிறார், ‘அமிருதமே’ என்று தொடங்கி.
‘கொஞ்சுகிளி அன்னமொழி
குமுதஇதழ் அமுதால்
எஞ்சினன் நராதிபதி
ஈதொரு வியப்போ!
அஞ்சுதரு தீவினையின்
ஆரமுதும் நஞ்சாம்;
நஞ்சும்அமு தாம்உரிய
நல்வினையின் மாதோ,’
என்பது, வில்லி பாரதம்.
5. பதப்பொருள்
அருளிச்செய்கிறார், ‘பாவத்தை’ என்று தொடங்கி. ‘பலத்தைக்
கொடுப்பதாய்க்கொண்டு குடி ஏறிற்றோ?’
என்றது, ‘அவனிடத்தில் அதரமாகத்
திரண்டதோ?’ என்றபடி.
|