பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

298

திருவாய்மொழி - ஏழாம் பத்து

செய்த என்னுடைய பாபமானது பலத்தைக் கொடுப்பதாய்க் கொண்டு அங்கே குடி ஏறிற்றோ? 1அங்கே கிடந்தே அன்றோ இங்கே அனுபவிப்பிப்பது? என்றது, ‘பகவத் விஷயத்தில் தண்டனை உருவமாகக் கிடந்தே அன்றோ இங்கு அனுபவிப்பிப்பது?’ என்றபடி. 2செய்த செயலாகையாலே செய்த போதே நசித்துப் போமே? 3இவன் செய்த பாபத்துக்கு, தானே சுவதந்தரமாய் நின்ற பலத்தைக் கொடுப்பதற்குத் தகுதி இல்லையே! 4அனுபவித்தாலும் அழியாத பாவம்’ என்பாள், ‘வல்வினை’ என்கிறாள்.

    கோலம் திரள் பவளம் கொழுந்துண்டங்கொலோ அறியேன்-அழகு திரண்டிருந்துள்ள பவளத்தினுடைய அன்பினையுடைத்தான முறியோ? அறிகிலேன். புழுதி புடைத்திராமைக்கு ‘முறியோ’ என்கிறது; 5முறித்த வாயானது ஒளி உண்டாய் நெய்த்திருக்கும் அன்றோ? நீல நெடுமுகில் போல் திருமேனி அம்மான் - 6இதுதான் என்றும் உண்டாய் இருக்கச் செய்தே, இதற்கு முன்பு பாதகமாயிற்று இல்லை அன்றோ? கூட்டுப்படை நின்றவாறே வலியாநின்றதாயிற்று. நீலமாய் இனிமை அளவு இறந்துள்ள முகில் போன்ற வடிவையுடைய சர்வேஸ்வரனுடைய. தொண்டை வாய்-கோவ்வைப்பழம் போலே கனிந்து நெய்த்து அன்றோ திருப்பவளந்தான் இருப்பது?

____________________________________________________________________

1. ‘தன் ஆற்றாமையாலே சொல்லும் அளவே அன்று; உண்மையும் அதுவே’
  என்கிறார், ‘அங்கே’ என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார், ‘பகவத்
  விஷயத்தில்’ என்று தொடங்கி.

2. ‘தண்டனை உருவமாகக் கிடந்து அனுபவிக்கவேண்டுமோ, தானே சுவதந்தரமாக
  அனுபவிப்பித்தாலோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘செய்த
  செயலாகையாலே’ என்று தொடங்கி.

3. அசேதனம் ஆகையாலும் மாட்டாது என்று வேறும் ஒரு வகையில் விடை
  அருளிச்செய்கிறார், ‘இவன் செய்த’ என்று தொடங்கி.

4. ‘வல்வினையேன்’ என்பதில் ‘வல்’ என்ற சொல்லுக்குப் பொருள்
  அருளிச்செய்கிறார், ‘அனுபவித்தாலும்’ என்று தொடங்கி.

5. ‘துண்டம் புழுதி புடைத்திராதோ?’ என்ன, ‘முறித்த வாயானது’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘நெய்த்திருத்தல்-பளபளவென்றிருத்தல்.

6. ‘இதுதான்’ என்றது, திருப்பவளத்தில் அழகினை. கூட்டுப் படையாவது, திருமேனியில்
  அழகு. பதப்பொருள் அருளிச்செய்கிறார், ‘நீலமாய்’ என்று தொடங்கி.