வ
|
300 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
வி - கு :
‘கண்ணப்பெருமான் புருவமவை நீல விற்கொல்? கருப்புச் சிலைகொல்? என் உயிர் மேலனவாய் என்றும்
நின்று அடுகின்றன,’ என்க.
ஈடு :
நான்காம் பாட்டு: 1‘என்தான்! இங்ஙனே கீழ் மேல் ஆயிற்றோ போய்?’ என்று திருப்புருவத்தில்
அழகு வளைந்துகொடு வந்து நலிகிறபடியை அருளிச்செய்கிறார்.
இன் உயிர்க்கு -
என்னுடைய நற்சீவனைக் கொள்ளுகைக்காக. ஏழையர்மேல் வளையும் - 2வளைப்பாரும் இன்றிக்கே
வளைக்கைக்கு விஷயமுமின்றிக்கே, செயப்படுபொருள் இல்லாமலும் செய்பவன் இல்லாமலும் வளையாநின்றது.
வளைப்பார் இல்லாமையாலே கர்த்தா இல்லை; விஷயம் இணை நீல வில்கொலோ - ஏழையர்மேல் வளைகிற
3நீலமான இரண்டு விற்களோ? என்றது, 4‘பகைவர்களை அழிக்கத் தக்க,
இந்திரவில் போன்ற விற்களைப் பிடித்து’ என்னும் படியே என்றபடி. 5இந்திர
வில்லுக்கு அபலைகளையே நலியவேணும் என்னும் நிர்பந்தம் இல்லை அன்றோ? மன்னிய சீர் மதனன்
கருப்புச் சிலைகொல் - 6பெண் பிறந்தாரையே நலியக் கூடியதான காமனுடைய வில்லுதானேயோ?
7அதுதன்னிலும் சிவனாலே வடிவு
_____________________________________________________________________
1. ‘புருவமவையே’ என்றதனைத்
திருவுள்ளம் பற்றி ரசோக்தியாக அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘கீழ்மேலாயிற்றோ?’ என்றது,
‘தாழ்ந்தது மேலாய் விட்டதோ?’
என்பது ரசோக்தி.
2. புருவம் தானே வளைந்திருக்கையாலே
‘வளைப்பாரும் இன்றிக்கே’ என்கிறார்,
‘ஏழையர்’ என்கையாலே ‘விஷயம் இல்லை’ என்கிறார்.
3. ‘நீலமான இரண்டு
விற்கள்’ என்றது, இந்திர வில்லினைக் குறித்தது.
4. ‘இந்திரவில் அப்படி
இனியதாக இருக்குமோ?’ என்ன, ‘இருக்கும்’ என்று
அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘பகைவர்களை’ என்று தொடங்கி.
‘ஸக்ரசாப நிபே சாபே
க்ருஹீத்வா ஸத்ருநாஸநே’
என்பது, ஸ்ரீ ராமா. கிஷ்கிந்.
3 : 9.
5. ‘நன்று; ஐயப்படுவான்
என்? அதுதானே என்ன ஒண்ணாதோ?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘இந்திரவில்லுக்கு’
என்று தொடங்கி.
6. ‘மதனன் கருப்புச் சிலைகொல்’
என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார். ‘பெண்
பிறந்தாரையே’ என்று தொடங்கி.
7.
‘மன்னிய சீர்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘அது தன்னிலும்’ என்று
தொடங்கி.
|