இழப
|
ஏழாந்திருவாய்மொழி -
பா. 4 |
301 |
இழப்பதற்கு முன்புத்தை
அவன் கையில் வில்லாக வேணும் கருப்புச் சிலைகொல்- 1கண்ணுக்கு ஆபாசமாய்ப் பாதகம்
உறைத்திருக்கிறபடி.
மதனன் தன் உயிர்த்தாதை
கண்ணப்பெருமான் புருவம் அவையே-அவனுடைய சம்பந்தத்தால் வந்த இராசகுலங்கொண்டு திரிகிறவன் கையில்
வில்லுக்கு இத்தனை உறைப்பு உண்டாக மாட்டாது, அவனுக்குங்கூடத் தந்தையான கிருஷ்ணனுடைய திருப்புருவங்கள்தாமே
ஆகவேணும். 2தன் கைச்சார்ங்கமதுவே போல் புருவ வட்டம் அழகியவனுடைய புருவங்கள்தாமேயாக
வேண்டும். ஆண்டாள் வார்த்தை இருக்கிறபடி அன்றோ? 3‘தருமம் அறியாக் குறும்பனை -
4தருமம் அறியும் போது முடி சூடின க்ஷத்திரியன் வயிற்றிலே பிறந்தவனாக வேண்டாவோ?
5யாதவர்கள் நேரே முடி சூடுவது இல்லை அன்றோ? இரக்கம் 6இருக்கும்படி முதலிலே
புதியது உண்டு அறியாதவனாயிற்று. ஸ்ரீநந்தகோபர், தம்முடைய இராச்சியத்திலே மூலையடியே நடந்தி திரிவான்
ஒரு
____________________________________________________________________
1. ‘போர்க்கு உரிய கருவி அல்லாத
கருப்புச் சிலை பாதகம் ஆமோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘கண்ணுக்கு’ என்று தொடங்கி.
2. ‘திருப்புருவங்கள் ‘சிலைகொல்’
என்று விகற்பிக்கும்படி விற்போல இருக்குமோ?’
என்ன, ‘இருக்கும்’ என்று அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘தன்கைச் சாரங்கம்’
என்று தொடங்கி. இது, நாய்ச்சியார் திருமொழி. 14 : 6. ‘ஆண்டாள்
வார்த்தை
இருக்கிறபடி அன்றோ?’ என்றது, ‘ஏனையோரைப் போல அன்றித்
திருப்புருவத்தில் அழகினை
உட்புக்கு அனுபவித்தவன் வார்த்தை’ என்றபடி.
3. திருப்பாசுரத்திற்குப்
பொருள் அருளிச்செய்கிறார், ‘தருமம் அறியா’ என்று
தொடங்கி. ஈண்டுத் தருமம் என்றது,
கிருபையை; ‘ஆந்ருஸம்ஸ்ய பரோ தர்ம:’
எனப்படுகையாலே.
4. ‘தருமம் அறியா’ என்றதன்
பின் ‘குறும்பனை’ என்கிறவளுடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார், ‘தருமம் அறியும் போது’ என்று
தொடங்கி.
5. ‘ஸ்ரீ வசுதேவர் க்ஷத்திரியர்
அல்லரோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘யாதவர்கள்’ என்று தொடங்கி.
6. ‘தருமம் அறியா’ என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘அருன்’ என்று
தொடங்கி. ‘குறும்பனை’ என்பதற்குப்
பொருள், ‘ஸ்ரீநந்தகோபர்’ என்று
தொடங்கும் வாக்கியம்..
|