ப
|
302 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
பிள்ளையாயிற்றுப் பெற்றது.
1தன் கைச் சார்ங்கம் - கையிலே வில்லைக் கண்டால், ‘முகத்திலே இருக்கக்கூடிய
அது கையிலே இருந்ததே! என்னாலாம்படியாய் இருக்கும்; முகத்திலே கண்டவாறே, ‘கையிலே இருக்கக்கூடிய
இது முகத்திலே இருந்ததே!’ என்னலாய் இருக்கும். அதுவே போல என்கிறதாயிற்று, முற்றும் ஒத்திருக்கையாலே.
2‘புருவ வட்டமழகிய’ என்றதனால் ‘தருமமறியான்’ என்று இழக்க ஒண்ணாதபடியாயிற்று,
வடிவழகு இருப்பது. பொருத்தம் இலியை-சில பொருள்கள் உளவே அன்றோ, நிறங்கள் அழகியனவாய்ப்
பார்த்தாவாறே அனுபவிக்க யோக்கியம் அன்றிக்கே இருப்பன? அவை போலே, வடிவழகேயாய், ஆசைப்பட்டார்
பக்கல் ரசம் தொங்கிலும் தொங்கானாயிற்று. கண்டீரே - 4அவனுக்குப் பொருத்தம்
இல்லாவிட்டால், நமக்குப் பொருத்தம் இல்லையாகில் அன்றோ விட்டிருக்கலாவது? அவன் பொருந்தாமை
தமக்குத் தொடர்ந்து திரியுமத்தனையாயிற்று.
புருவம் அவையே-5மேலே
கூறிய அழகுகள்தாம் அநுகூலங்கள் என்னும்படியாகவாயிற்று, இவை பாதகமாகிறபடி. என் உயிர் மேலனவாய்-6இருப்பன
அங்கேயாய் இருக்கச் செய்தேயும், நோக்கு
____________________________________________________________________
1. ‘தன்கைச் சார்ங்கம்
அதுவேபோல்’ என்பது, முற்றுவமை என்று கூறத்
திருவுள்ளம் பற்றி, அதனை விரித்து அருளிச்செய்கிறார்,
‘தன்கைச்சார்ங்கம்’ என்று
தொடங்கி.
2. ‘நீர்மை இல்லாவிட்டால்
விடுமத்தனை அன்றோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘புருவ வட்டம்’ என்று தொடங்கி.
3. ‘புருவவட்டம் அழகிய’
என்றதனோடே ‘பொருத்தம் இலியை’ என்றதனையும்
கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார், ‘சில
பொருள்கள்’ என்று தொடங்கி.. ‘சில
பொருள்கள்’ என்றது, எட்டிப்பழம் முதலாயினவற்றை. தொங்குதல்-இருத்தல்.
4. ‘பொருத்தம் இல்லாவிட்டால்,
‘கண்டீரே’ என்று கேட்பான் என்?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘அவனுக்கு’ என்று தொடங்கி.
5. ‘அவையே’ என்ற ஏகாரத்துக்குப்
பொருள் அருளிச்செய்கிறார், ‘மேலே கூறிய’
என்று தொடங்கி.
6. ‘அவன்
முகத்திலே இராநிற்க, இவர்க்குத் தீங்கு தருவனவாதல் யாங்ஙனம்?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘இருப்பன’ என்று தொடங்கி.
|