பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

308

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    ஈடு : ஏழாம்பாட்டு. 1‘இவை அவள் முன்னே நிற்க வல்லனவோ? இவற்றுக்கெல்லாம் தாம் நெற்றிக்கை அன்றோ?’ என்று திருநுதலில் அழகு வந்து நலிகிறபடியை அருளிச்செய்கிறார்.

    அன்னையர்காள்! ‘காண்மின்கள்’ என்று காட்டும் வகை அறியேன் - 2‘இது நலியாநின்றது என்று சொல்லாநின்றாய்; எங்களுக்கு இது தெரிகிறது இல்லை; எங்களுக்கும் தெரியும்படி சொல்லிக்காணாய்’ என்ன, ‘நீங்களும் இதனைக் காணுங்கோள்’ என்று, உங்களுக்குக் காட்டும் பிரகாரம் அறிகின்றிலேன். 3என் கைக்குப் பிடி தருதல், உங்களுக்கு உருவு வெளிப்பாடு உண்டாதல் செய்யில் அன்றோ என்றார் காட்டலாவது? 4ஆண்களுக்குக் காட்டில் அன்றோ பருவம் நிரம்பின உங்களுக்குக் காட்டலாவது?’ என்பாள், ‘அன்னையர்காள்’ என்கிறாள். நாள் மன்னு வெண்திங்கள் கொல்-சுக்கிலபக்கத்து எட்டாம் நாள் சந்திரனோ? 5இளகிப் பதித்திருக்கைக்கும், ‘காட்டு, காட்டு’ என்று வளருகைக்கும், காட்சிக்கு இனியதாய் இருக்கைக்கும். நயந்தார்கட்கு 6நச்சு இலை கொல்-ஆசைப்பட்டார்க்கு நச்சுப்பூண்டோ?’ என்னுதல்; அன்றிக்கே, ‘தன்னை ஆசைப்பட்டார்க்கு ஆசைப்பட வேண்டாதிருக்கிறதோ?’

_____________________________________________________________________________

1. ‘திருநுதலே’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி ரசோக்தியாக அவதாரிகை
  அருளிச்செய்கிறார், நெற்றிக் கை - முன்னே நிற்கின்ற வியூகம்’ என்பதும், பிரதானம்’
  என்பதும் பொருள். ‘எதிர் சேனை’ என்றுமாம்.

2. ‘மேல் திருப்பாசுரத்தில் ‘காண்மின்களே’ என்று கூறிவைத்து. இத்திருப்பாசுரத்தில் ‘காட்டும்
  வகை அறியேன்’ என்பது என்?’ என்கிற சங்கையிலே அருளிச்செய்கிறார், ‘இது
  நலியாநின்றது’ என்று தொடங்கி.

3. வகை அறியாமைக்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘என் கைக்கு’ என்று தொடங்கி.

4. ‘அன்னையர்காள்’ என்ற விளிக்கு பாவம் அருளிச்செய்கிறார். ‘ஆண்களுக்கு’ என்று
  தொடங்கி.

5. சுக்கிலபக்ஷத்து எட்டாம் நாள் சந்திரன் என்பதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்,
  ‘இளகிப் பதித்து’ என்று தொடங்கி. காட்டு காட்டு என்று வளருகை - மேன்மேலென
  வளருகை.

6. ‘நச்சிலைகொல்’ என்பதற்கு இரண்டு பொருள் அருளிச்செய்கிறார்: ‘ஆசைப்பட்டார்க்கு
  ஆசைப்பட வேண்டாதிருக்கிறதோ?’ என்பது இரண்டாவது பொருள்.