பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

என

ஏழாந்திருவாய்மொழி - பா. 7

309

என்னுதல். 1‘நச்சு மா மருந்தம்’ என்னுமவர் அன்றோ இப்போது கண்ணாஞ்சுழலை இட்டு இவ்வார்த்தை சொல்லுகிறார்? ‘இன்ன மலையிலே உண்டு’ என்று அங்கே சென்று தேடி வருந்தவேண்டாமல், ஆசைப்படுவதுமாய் மேல் காற்றிலே காட்டப் பரிகாரமுமாம் மருந்தாயிற்று இது. அபத்தியத்தையும் பொறுத்துக்கொள்ளும் மருந்தாதலின். ‘மாமருந்தம்’ என்கிறது. இவன் தலையிலே பழி இட்டுக் கைவிடும் மருந்து அன்று; 2வானமாமலையில் தலையான மருந்து அன்றோ. இப்போது இவளுக்கு நச்சுப் பூண்டு ஆகிறது?

    சேண் மன்னும் நால் தடம் தோள் பெருமான்தன் திருநுதலே-ஒக்கத்தையுடைத்தாய், கற்பகத்தரு பணைத்தாற்போலேயாய்ச் சுற்றுடைத்தாய் இருக்கிற திருத்தோள்களில் அழகாலே என்னைத் தனக்கே உரியவளாகும்படி ஆக்கினவனுடைய திருநெற்றியே. ‘நீண்டு உருண்டு கணையங்கள் போன்ற அழகிய திருத்தோள்கள் அணிகளால் ஏன் மறைக்கப்படாமல் இருக்கின்றன? என்னும்படியே திருவடி அகப்பட்ட துறையிலேகாணும் இவளும் அகப்பட்டது. 3கொடியேன் உயிர் கோள் இழைத்துக் கோள் மன்னி ஆவி அடும்-என் உயிரினுடைய அழகை அழித்துக்கொள்கையிலே விருப்பத்தைச்செய்து முடியாநின்றது. அன்றிக்கே, ‘அழகு பாதகமாம்படி பாவத்தைச் செய்த என்னுடைய உயிரை முடிக்கையிலே துணிந்து, அதிலே விருப்பத்தை வைத்து, உயிரை முடியாநின்றது,’ என்றுமாம்.

(7)

______________________________________________________________________________

1. வியாக்கியாதாவின் ஈடுபாடு, ‘நச்சுமாமருந்தம்’ என்று தொடங்கும் வாக்கியம்.
  ‘நச்சுமாமருந்தம்’ என்பது, திருவாய். 3. 4. : 5. ‘நச்சுமா மருந்தம்’ என்பதற்குப் பொருள்
  அருளிச்செய்கிறார், ‘இன்ன மலையிலே’ என்று தொடங்கி. இதனை விவரணம் செய்கிறார்,
  ‘இவன் தலையிலே’ என்று தொடங்கி.

2. பரமபதநாதனுடைய நெற்றி இவளுக்கு விஷப்பூண்டு ஆகிறது, பிரிவின் முறுகுதலாலே
  என்கிறார், ‘வானமாமலையில்’ என்று தொடங்கி. தோள் அழகிலே தோற்றதற்குப்
  பிரமாணம் காட்டுகிறார். ‘நீண்டு உருண்டு’ என்று தொடங்கி.

    ‘ஆயதாஸ்ச ஸூவ்ருத்தாஸ்ச பாஹவ: பரிகோபமா:
     ஸர்வபூஷண பூஷார்ஹா, கிமர்த்தம் ந விபூஷிதா:’

என்பது, ஸ்ரீராமா. கிஷ். 3 : 14.

3. கொடியேன் உயிரினுடைய, கோள் உண்டு - அழகு அதனை இழைத்துக்கொள்கையிலே
  -அழித்துக்கொள்கையிலே, மன்னி - விருப்பத்தைச்செய்து, ஆவி அடும்-‘உயிரை
  முடிக்கின்றது’ என்பது பொருள்.