பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

312

திருவாய்மொழி - ஏழாம் பத்து

    பொ - ரை : உலகத்தை எல்லாம் கொள்ளக்கூடியதான வலிய இருளை எஃகிய செறிந்த இருளின் உள்ளே கொள்ளப்பட்ட நீல நிறத்தையுடைத்தான அழகிய நூலின் திரளோ? அன்று; மாயனுடைய திருக்குழல், மலர்கின்ற பூக்களையுடைய குளிர்ந்த திருத்துழாயினது வாசனையானது பரவும்படி என் உயிரைக் கொள்கின்றவாற்றை அறியீர்கோள்; தாய்மார்களே! இடித்துக் கூறுகின்றீர்கோள்.

    வி - கு :
‘அன்னைமீர்! மாயன் குழல், உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்? அன்று; மாயன் குழல் என் உயிரைக் கள்கின்றவாறு அறியீர்; கழறாநிற்றீர்.’ என்க.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘இச்சமயத்துக்கு அன்றோ நமக்குப் பூவும் புழுகும் இட்டுச் சிரஸாவஹித்துக்கொடு போந்தது?’ என்று ‘திருக்குழற்கற்றையில் அழகு வந்து நலியாநின்றது’ என்கிறாள்.

    கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின் உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல் - 2திருக்குழலின் அழகுக்கு ஓர் உவமானம் சொல்லப்புக்கு, அழகுக்கு அதுதான் நேர்கொடு நேர் உபமானமாகப் போராமையாலே அதனைக் கிடந்து சிக்ஷிக்கிறது. ‘பிரளயகாலத்தில் பகல் இரவு என்னும் வேறுபாடு அற எங்கும் ஒக்கத் தானேயாம்படி பரந்து நின்றுள்ள, கோட்பாட்டையுடைய இருள்’ என்னுதல். ‘கோள்’ என்று மிடுக்காய், ‘மிடுக்கையுடைய இருள்’ என்னுதல். அந்த இருட்டினைச் சுகிருவது -எஃகுவது: இப்படி எஃகி அதிலே கொழுவிதான அமிசத்தைத் திரட்டுவது, அது தன்னிலும் உண்டான புற இதழைக் கழிக்க, அகவாயில் வயிரமாய் நீலமான நிறத்தையுடையத்தாய் நன்றாய் இருந்துள்ள நூல் திரளோ? அன்று மாயன் குழல் - 3இவள் நெஞ்சிலே அழகிதாக மயிர்பட்டது.

______________________________________________________________________________

1. ‘மாயன் குழல்’ என்பதனைத் திருவுள்ளம் பற்றி ரசோக்தியாக அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. திருக்குழலின் அழகுக்கு உபமானமான இருளை அடைமொழிகளால் விசேடித்ததற்கு,
  பாவம் அருளிச்செய்கிறார், ‘திருக்குழலில்’ என்று தொடங்கி. சிக்ஷித்தல்-அடைகொடுத்து
  ஓதல். கோட்பாட்டையுடைய-எங்கும் பரந்திருத்தலை இயல்பாகவேயுடைய. அன்றிக்கே,
  ‘அழகையுடைய’  என்னுதல். எஃகுவது-பன்னுவது. கொழுவிதான-சாராம்ஸமான.

3. இப்படி வர்ணிப்பதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘இவள்’ என்று தொடங்கி.