பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஏழாந்திருவாய்மொழி - பா. 9

313

காணும். 1இத்தனை அடைமொழி கொடுத்துக் கூறினால் ஆயிற்று உபமானமாகப் போராது என்னலாவது. பின்னையும், ஆச்சரியத்தையுடையனான அவனுடைய திருக்குழல் என்னுமித்தனை. இத்தனை 2இடு சிவப்பானது அவனுடைய இயல்பிலே அமைந்ததான திருக்குழலுக்கு ஒப்பாகுமோ?

    விள்கின்ற பூந்தண்துழாய் விரை நாற வந்து-அலராநிற்பதாய் அழகியதாய்க் குளிர்ந்திருந்துள்ள திருத்துழாயில் பரிமளமானது 3முகத்திலே அலை எறியவாயிற்று வந்து தோற்றுகிறது. 4திருக்குழலில் அழகுக்குத் திருத்துழாயில் பரிமளமானது தூசி ஏறி நடக்க ஆயிற்று வந்து பாதகம் ஆகிறது. என் உயிரைக்  கள்கின்றவாறு அறியீர் - 5நீங்கள் எல்லாரும் சுகமே இருக்கச்செய்தே, என் ஒருத்தியுடைய ஆத்துமாவை வந்து களவு காண்கிற பிரகாரத்தை அறிகின்றலீர்கோள். கள்கின்ற - களவு காண்கின்ற. 6‘களவு காண்கையாவது என்?’ என்னில், இத்தலையில் இசைவு இன்றிக்கே இருக்கக் கைக்கொள்ளுதல். 7‘அவன் அன்றோ களவு காண்கிறான்?’

______________________________________________________________________________

1. ‘அன்று’ என்பதற்குப் பாவம் அருளிச்செய்கிறார், இத்தனை’ என்று தொடங்கி.

2. ‘இடு சிவப்பானது’ என்றது, ‘இயல்பு அன்றிக்கே ஆரோபிக்கப்பட்ட சிவப்பானது’
  என்றபடி.

3. முகத்திலே-தலைவியின் முகத்திலே.

4. ‘விள்கின்ற பூந்தண் துழாய் விரை நாற வந்து’ என்றதனால் பலித்த பொருளை
  அருளிச்செய்கிறார், ‘திருக்குழலில்’ என்று தொடங்கி. தூசி - சேனையின் முகம்.

5. ‘என் உயிரை’ என்று விசேடிக்கின்றவளுடைய கருத்தை அருளிச்செய்கிறார், ‘நீங்கள்’
  என்று தொடங்கி.

6. சுவாபதேசத்திலே சங்கித்துப் பரிகரிக்கிறார், ‘களவு காண்கையாவது’ என்று தொடங்கி.

7. ‘‘சோரேண ஆத்மா அபஹாரிணா’ என்கிறபடியே, இவன் கள்ளனாய் இருக்க, அவன்
  செயலைக் களவு என்கிறது என்?’ என்ன, ‘அவன் அன்றோ’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார். என்றது, ‘இவன் ஆத்துமாவை அபகரித்ததன் பிராபல்யம்,
  ஈஸ்வரன், தனக்கு உரிய பொருளையும் இவன் அறியாதபடி அபகரிக்கும்படியாயிற்று’
  என்றபடி.