New Page 1
|
ஏழாந்திருவாய்மொழி -
பா. 10 |
315 |
பொ-ரை :
‘முற்றத்திலே நிற்கின்றாய்’ என்று நெரித்த கையினையுடையவர்களாய்ச் சுற்றிலும் நின்றுகொண்டும்,
உங்களிலே விசாரித்துக்கொண்டும் என்னை நீங்கள் வைகின்றீர்கள்; மூன்று உலகங்கள் முழுதும்
சுடர்ச்சோதி மணி நிறமாய் விரிகின்ற சுடர் முடிக்கே என் உள்ளம் ஒருப்பட்டது; ‘அதுவாயிற்று’
என்றபடி. தாய்மார்களே! உங்களுக்கு என் பக்கல் விருப்பம் எதற்கு?
வி - கு :
‘அன்னைமீர்! நீர் நெரித்த கையராய் என்னை வைதிர்; மூவுலகும் மணி நிறமாய் விரிகின்ற சுடர்
முடிக்கே என் உள்ளம் ஒற்றுமை கொண்டது; நுங்கட்கு நசை என்?’ என்க.
ஈடு :
பத்தாம் பாட்டு. 1‘திருமகள் கேள்வனுங்கூட நம்மைத் தலைமேல் கொண்டு போருகிறது
இவ்வவஸ்தைக்கு அன்றோ?’ என்று திருமுடியில் அழகு வந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள்.
நிற்றி முற்றத்துள்
என்று. . . . . . . . . .நுங்கட்கு நசை என் - 2இத்தனையும் நசை அறச்
சொல்லாவிடில் அவர்கள் விடார்கள் போலே. நிற்றி முற்றுத்துள் என்று - ‘முற்றத்துள் நிற்றி’
என்பர்கள். 3படுக்கையினின்றும் எழுந்திருந்து எல்லாரும் காணும்படி முற்றத்திலே நிற்கைக்கு
மேற்படப் பழி இல்லையாக நினைத்திராநின்றார்கள். 4‘எவள் முன்பு ஆகாசசாரிகளான
பிராணிகளாலும் பார்க்கப்படாதவளாய் இருந்தாளோ, அத்தகைய சீதையைப் பெருந்தெருவில் செல்லும்
மக்களும் கண்டார்கள்,’ என்றதைப் போன்று நினைத்திரா நின்றார்களாயிற்று இதனை. முற்றித்திலே
புறப்பட்டு நிற்கும்படி
______________________________________________________________________________
1. ‘சுடர் முடிக்கே’ என்றதனைக்
கடாட்சித்து ரசோக்தியாக அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ‘‘நசை என் நுங்கட்கே?’
என்று ஆசை அறச் சொல்லுவான் என்?’ என்ன, ‘இத்தனையும்’
என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்,
3. ‘முற்றத்துள் நிற்றல் பழியோ?’
என்ன, ‘படுக்கையில்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
4. புறப்பட்டு முற்றத்திலே
நிற்பதனைத் தெருவிலே புறப்பட்டது போல நினைத்து, அப்படிப்
புறப்பட்டதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘எவள்’ என்று தொடங்கி.
‘யாந ஸக்யா புரா த்ரஷ்டும்
பூதை: ஆகாஸகைரபி
தாமத்ய ஸீதாம் பஸ்யந்தி
ராஜமார்க்ககதா ஜநா:’
என்பது, ஸ்ரீ ராமா. அயோத்.
33 : 7.
|