பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

316

திருவாய்மொழி - ஏழாம் பத்து

பிறந்த ஸாஹஸத்துக்கு நெரித்த கையராய். என்னை நீர் - 1உருவு வெளிப்பாடு புறப்பட விடுவித்து நிறுத்த நிற்கிற என்னை, இதனால் நலிவு வாராதபடி புண்ணியம் செய்த நீங்கள். என்றது. ‘அவன் புறப்பட விடுவித்து நிறுத்த நிற்கிற என்னை, இதுகொண்டு காரியம் இல்லாத நீங்கள்’ என்றபடி. 2சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்-‘இவளைத் தப்புவித்தோமாம் விரகு என்?’ என்று நெஞ்சிலே விசாரிக்கையும், கால்வாங்கிப் பேர நிற்கவும் ஒண்ணாதபடி சூழநின்றும் பொடியா நின்றீர்கோள். அன்றிக்கே, ‘போயும் வந்தும் பொடியாநின்றீர்கோள்’ என்னுதல்.

    சுடர்ச்சோதி மணி நிறமாய் இம்மூவுலகும் முற்ற விரிகின்ற சுடர் முடிக்கே என் உள்ளம் 3ஒற்றுமை கொண்டது - மிக்க புகரையுடைத்தான இரத்தினத்தினுடைய ஒளியையுடைத்தாய்க்கொண்டு கண்ட இடம் எங்கும் பரம்பாநின்றுள்ள ஒளியையுடைய திருமுடியிலே ஒருமைப்பட்டது என்னுடைய உள்ளம். அன்றிக்கே, ‘அங்கே விலை செய்து கொடுத்தது’ என்னுதல். என்றது, ‘தப்புவிக்கைக்கு வார்த்தை சொல்லுகிற இவர்களைப் போலே ஓர் இடத்தில் அன்று அன்றே, அகப்படுத்தி நலியக் கோலுகிற அது நிற்கும்படி?’ என்பதனைத் தெரிவித்தபடி. அன்னைமீர் நசை என் நுங்கட்கே-தாய்மாரான நீங்கள் என் பக்கல் நசை அற அமையும், 4தாய்மாராவார், பெற்று வளர்த்தப் போகத்திற்குத் தக்க பருவம் பிறந்தவாறே கைப்பிடித்தவன் கையிலே காட்டிக்கொடுத்துக் கடக்க நிற்குமத்தனை

______________________________________________________________________________

1. ‘என்னை நீர்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘உருவு வெளிப்பாடு’ என்று
  தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார், ‘அவன் புறப்பட’ என்று தொடங்கி..

2. ‘சுற்றியும் சூழ்ந்தும்’ என்பதற்கு இரு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்:
  முதற்பொருள், மனத்தின் செயலையும் சரீரத்தின் செயலையும் சொல்லுகிறது; இரண்டாவது
  பொருள், சரீரத்தின் செயல் மாத்திரம் சொல்லுகிறது.

3. ‘ஒற்றுமை கொண்டது’ என்பதற்கு என்பதற்கு அருளிச்செய்யும் இருவகைப் பொருள்களுள்
  இரண்டாவது பொருள், ‘விலை செய்து கொடுத்தது’ என்றபடி. ஒற்றுமை - விலையும்,
  ஒருமைப்பாடும்.

4. ‘அன்னைமீர்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘தாய்மாராவார்’ என்று தொடங்கி.