பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

318

திருவாய்மொழி - ஏழாம் பத்து

கொண்டது என்னும்படி ஆயிற்று இவர்க்குப் பிரகாசித்தபடி. 1அவர்கள் கண்களுக்கு அரியன் ஆனாற்போலே ஆயிற்று, இவர் கண்களுக்குச் ‘சூழவுந் தாமரை நாண்மலர் போல் வந்து தோன்றும்’ என்னும்படி பிரகாசித்தபடி. குருக்கூர்ச்சடகோபன் சொன்ன-ஆழ்வார் அருளிச்செய்தழ உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார் உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே - 2சொல்லப்படுகின்ற பொருளை உள்ளபடி சொல்லவல்ல ஆற்றலையுடைத்தான ஆயிரத்திலும் வைத்திக்கொண்டு இப்பத்தையும் கற்க வல்லவர்கள், 3நித்தியானுபவம் பண்ணாநின்றாலும் மேன்மேலெனப் பகவத்குணங்களைப் பூர்ணமாக அனுபவிக்கைக்குத் தகுதியான யோக்கிதையயுடைய நித்தியசூரிகளோடு ஒரு கோவையாய் உருவு வெளிப்பாட்டாலே நோவுபடாமல் அடியார்கள் குழாங்களை உடன் கூடி நித்தியானுபவம் பண்ணப்பெறுவர். மாய்கையும் உருவு வெளிப்பாடும் பரியாயம் என்று இருக்கிறார்காணும்.

    அன்றிக்கே, ‘மாயார்’ என்பதற்கு, ‘பிரியார்’ என்னுதல். 4பகவத் அபசாரம் பாகவத அபசாரம் உண்டானால் வருமது போல அன்றே, பகவானுடைய அங்கீகாரம் உண்டாய் அது நிலை நில்லாமையால் படும் கிலேசம்? 5பிரளயம் கோத்தாற்போலே, கண்ணைக்

______________________________________________________________________________

1. அப்பொருளை விவரணம் செய்கிறார், ‘அவர்கள் கண்களுக்கு’ என்று தொடங்கி.

2. ஆயிரத்துக்கு ‘உட்கு’ இன்னது என்று அருளிச்செய்கிறார், ‘சொல்லப்படுகின்ற’ என்று
  தொடங்கி.

3. நித்தியசூரிகளுக்கு ‘உட்கு’ இன்னது என்று அருளிச்செய்கிறார் ‘நித்தியானுபவம்’ என்று
  தொடங்கி. என்றது, ‘பகவானை அனுபவிக்கின்ற தன்மையில் சத்தி. மாயார் - பிரிந்து
  உருவு வெளிப்பாட்டாலே துக்கப்படார்.

4. ‘நன்று! பகவத் அபசாரம் முதலாயின அல்லலோ துன்பத்தை உண்டாக்குவன? உருவு
  வெளிப்பாடு துன்பத்தை உண்டாக்குமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘பகவத் அபசாரம்’ என்று தொடங்கி. பகவானுடைய அங்கீகாரம் - பகவத் அனுபவம்.

5. ‘உருவு வெளிப்பாடு துக்கத்தைக் கொடுப்பதற்குக் காரணம் என்?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘பிரளயம்’ என்று தொடங்கி. கண்ணைக்கண் கோத்துக்
  கிடக்கையாவது, தம்முடைய கண்ணை அவனுடைய கண் கோத்துக் கிடக்கிறது என்றபடி.