பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

1ந

32

திருவாய்மொழி - ஏழாம் பத்து

1நீ அண்மையில் இல்லாமையினாலேயோ, உனக்குச்சத்தி இல்லாமையினாலேயோ நான் இழக்கிறது?’ என்கிறாய் மேல். பண்ணுளாய் - என் துன்ப ஒலியைக் கேளாதிருக்கிறாய் அல்லையே. கவிதன்னுளாய்-என்னுடைய ஆர்த்தியை உட்கொண்ட சொற்களைக் கேளாதிருக்கிறாய் அல்லையே? பத்தியினுள்ளாய்-இப்படிச் சொல்லுவிக்கிற ஆற்றாமையை அறியாதிருக்கிறாய் அல்லையே? பரம் ஈசனே-உனக்கு முடியாதது ஒன்று உண்டாக அதனைச் செய்யாமாட்டாது இருக்கிறாய் அல்லையே? 2உன் சேஷித்துவம் ஏறிப் பாயாத இடம் உண்டோ?

    3
‘இது கிடக்கிடு; நீதான் 4முன்பே செய்யாதது ஒன்று உண்டோ?’ என்கிறார். ‘ஆனால், இனிச் செய்ய வேண்டுவது இல்லையே’ என்றான்; 5‘நானும் செய்த காரியத்தில் குறை உண்டு என்கிறேன் அல்லேன்; நீ செய்யாத காரியத்தை அன்றோ சொல்லுகிறது’ என்கிறார்: என் கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய்-புறங்கரணகட்கும் அகக்கரணத்துக்கும் உன்னை ஒழிய விஷயம்

 

1. ‘பண்ணுளாய், கவிதன்னுளாய், பத்தியினுள்ளாய்’ என்ற மூன்றனையும் திருவுள்ளம்
  பற்றி, ‘நீ அண்மையில் இல்லாமையினாலேயோ’ என்றும், ‘பரமீசனே’ என்றதனைத்
  திருவுள்ளம் பற்றி, ‘உனக்குச் சத்தியில்லாமையினாலேயோ’ என்றும்
  அருளிச்செய்கிறார். ‘கேளாதிருக்கிறாய் அல்லையே? அறியாதிருக்கிறாய் அல்லையே?’
  என்றதனால், அண்மையைத் தெரிவித்தபடி. ‘உனக்கு முடியாதது ஒன்று உண்டாக’
  என்றதனால், அவன் சத்தியைத் தெரிவித்தபடி.

2. ‘பரம்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘உன் சேஷித்துவம்’ என்று தொடங்கி.

3. நான்காம் அடிக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘இது கிடக்கிடு’ என்று தொடங்கி.

        ‘போன படைத்தலை வீரர்த மக்கிரை போதாவிச்
        சேனை கிடக்கிடு தேவர் வரிற்சிலை மாமேகம்’

என்பர் கம்பநாட்டாழ்வார் (குகப்படலம்.20)

4. ‘முன்பே’ என்றது, ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் என்றபடி.

5. ‘கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘நானும்
என்று தொடங்கி. ‘கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய்’ என்றது, செய்த
  காரியம்; ‘ ஒன்று சொல்லாயே’ என்றது, செய்யாத காரியம்.