பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

உண

முதல் திருவாய்மொழி - பா. 7

33

உண்டோ? 1நெடியானே என்று கிடப்பது, உன்னை மெய்கொள்ளக் காண விரும்புவது, வஞ்சனே என்பதாயன்றோ அவை இருக்கின்றன? ‘‘கவி தன்னுளாய்’ என்று பாசுரத்தைச் சொல்லிற்று; ‘சொல்லுளாய்’ என்று வாக்கு இந்திரியத்தைச் சொல்லுகிறது. ‘ஆனால், நம்மைச் செய்யச் சொல்லுகிறது என்?’ என்ன. வந்து ஒன்று சொல்லாயே-எனக்காக நாலடி நடந்து வந்து, ‘நீ அஞ்சாதே கொள்’ என்று, என்னை, மாசுச:- துக்கப்படாதே என்னவேணும். 2அன்றிக்கே, ‘உன் இருப்பில் எனக்கு ஐயம் உண்டோ? என் கண் காண வந்து ஒன்று சொல்லுகை அன்றோ எனக்குத் தேட்டம்?’ என்கிறார் என்னுதல்.

(6)

                   669 

        ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கி
            லாதஓர் ஐவர்வன் கயவரை
        என்றுயான் வெல்கிற்பன்
            உன் திருவருள் இல்லையேல்?
        அன்று தேவர் அசுரர் வாங்க
            அலைகடல் அரவம் அளாவிஓர்
        குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன்
            பருகுஇன் னமுதோ!

    பொ-ரை: அக்காலத்தில் தேவர்களும் அசுரர்களும் பின் வாங்க, அலைகளையுடைய கடலிலே வாசுகி என்னும் பாம்பினைச் சுற்றி ஒப்பற்ற மந்தரம் என்னும் மலையை வைத்த எந்தையே! கொடியேனாகிய அடியேன் பருகுவதற்குரிய அமுதாய் இருப்பவனே! ஒரு விஷயத்தைச் சொல்லி அந்த ஒருமைப்பாட்டிலேயே நில்லாத ஒப்பற்ற ஐம்பொறிகளாகிய வலிய கயவர்களை, உன் திருவருள் இல்லையேல் என்றைக்கு யான் வெல்வேன்?

    வி-கு: ‘அளாவி வைத்த எந்தாய்’ என்க. ஒருத்து-ஒருமைப்பாடு. கயவர்-கீழ்மக்கள்.

    ஈடு: ஏழாம் பாட்டு. 3‘நீ பாராமுகம் செய்தால், மிகுந்த கயமையையுடைய இந்திரியங்களை என்னாலே வெல்ல உபாயம் உண்டோ?’ என்கிறார்.

 

1. ‘எல்லாக் காரணங்களுக்கும் விஷயம் அவனாக இருக்க இயலுமோ?’
  என்ன,  ‘நெடியானே’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார்.‘முடியானே’ என்ற திருவாய்மொழி பார்க்க.

2. ‘பண்ணுளாய்’ என்று தொடங்குகிற பதங்கள் மூன்றற்கும்,
  அண்மையிலிருப்பவன் என்று கொண்டு பொருள் அருளிச்செய்தார் மேல்;
  ‘நீயும் இருக்க நான் இழப்பதே?’ என்று இருப்பிலே கருத்தாகப் பொருள்
  அருளிச்செய்கிறார், அன்றிக்கே’ என்று தொடங்கி.

3. ‘உன் திருவருள் இல்லையேல் வன்கயவரான ஓர் ஐவரை என்றுயான்
  வெல்கிற்பன்?’ என்பனவற்றைக் கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.