ஒன
|
34 |
திருவாய்மொழி - ஏழாம்
பத்து |
ஒன்று சொல்லி-
1‘இராமன் இரண்டு பேசமாட்டான்,’ என்பாரைப் பற்றிப் பயம் கெட்டு இருக்கிறேனோ?
2அங்ஙனேயாகில், ‘இது எனக்கு விரதம்’ என்றதும் தப்பாதே அன்றோ? ஒன்று சொல்லி
ஒருத்தினில் நிற்கிலாத-ஒரு வார்த்தையைச் சொல்லி அதற்கு ஈடாக ஓர் அர்த்தத்திலே நிற்கக்
கடவதல்லாத. என்றது, ‘ஒரு விஷயத்தைச் சொல்லி, அது அனுபவிக்குந்தனையும் ஓர் இடத்திலே நில்லாத’
என்றபடி. ஒருத்து - ஒருமைப்பாடு. ஓர் ஐவர்-இப்படி இருப்பார் பலர். வன்கயவரை-பழகப்பழக அன்பு
இல்லாதவர்களாய் இருப்பவர்களை. என்று யான் வெல்கிற்பன்- 3‘இன்று இல்லையாகில்
நாளை வெல்லுகிறான், தானே வென்று வருகின்றான்,’ என்றிருக்கிறாயோ? உன் திருவருள் இல்லையேல்-
அவன் திருவருள் உண்டாகில் வெல்லுதலுமாம் அன்றோ? 4‘அருள் என்னும் ஒள்வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள்’ என்னக்கடவாதன்றோ? 5உன்னை அண்டைகொள்ளாதே பாண்டவர்கள்
துரியோதனனை வெல்லுமன்றன்றோ, நான் இந்திரியங்களை வெல்லுவது? கிருஷ்ணனை அடைந்து அருச்சுனன்
பகைவர்களை வென்றான் அன்றோ? 6‘பாண்டவர்கள் கிருஷ்ணனை அடைந்தவர்கள்;
________________________________________________________________________
1. ‘ஒன்று சொல்லி ஒருத்தினில்
நிற்கிலாத’ என்கிறவருடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார், ‘இராமன்’ என்று தொடங்கி.
‘ராமோ த்வி: நாபிபாஷதே’
என்பது, ஸ்ரீராமா. அயோத். 18:30.
2. ‘அவரைப் பற்றினால் பயம் கெட்டிருக்கும்
பிரகாரம் எப்படி?’ என்ன,
‘அங்ஙனேயாகில்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
‘அங்ஙனேயாகில்’ என்றது, ‘இரண்டாம் வார்த்தை இல்லை என்றாராகில்’ என்றபடி.
‘ஏதத் விரதம் மம’ என்பது, ஸ்ரீராமா. யுத். 18:33.
3. ‘என்று யான் வெல்கிற்பன்?’
என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘இன்று
இல்லையாகில்’ என்று தொடங்கி. ‘ஒரு நாளும் வெல்ல
முடியாது’ என்பது கருத்து.
4. அவன் திருவருள் இருந்தால்
வெல்லலாம் என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘அருள் என்னும்’ என்று தொடங்கி. இது பெரிய
திருமொழி, 6. 2:4.
5. ‘உன் திருவருள் இல்லையேல்
என்று யான் வெல்கிற்பன்?’ என்பதற்குத்
திருஷ்டாந்தம் காட்டுகிறார், ‘உன்னை அண்டை’ என்று
தொடங்கி.
6. பாண்டவர்கள்
கிருஷ்ணனையே அடைந்தவர்கள் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார், ‘பாண்டவர்கள்’ என்று
தொடங்கி.
‘க்ருஷ்ணாஸ்ரயா:
க்ருஷ்ணபலா: க்ருஷ்ண நாதாஸ்ச பாண்டவா;’
என்பது, பாரதம், ஆரண்.
பர். 18. 3:24.
|